அதிமுக பொன்விழா.. முதல்வர் ஸ்டாலினை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி.. ட்விட்டர் ஸ்பேஸில் உரை!
சென்னை: அதிமுக பொன்விழா நிறைவு நாளன்று ட்விட்டர் ஸ்பேஸில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தகவல் தொழில்நுட்பம் மூலம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு என தகவல் தொழிற்நுட்ப அணியை கொண்டுள்ளது.
தகவல் தொழிற்நுட்ப அணியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். இதன் அடுத்தக் கட்டமாக சமூக வலைதளம் மூலம் தொண்டர்களிடம் பேசும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

திமுகவை பின்பற்றும் கட்சிகள்
அந்த வகையில் அண்மைக் காலமாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாடுவது அதிகரித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் பேச உள்ளார்.

ஸ்பேஸில் மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வந்தது. இதற்காக கடந்த மாதம் தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு திமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அந்த வகையில் கடைசி நாளன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் தொண்டர்களிடம் உரையாற்றியது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்
இணையதளம் மூலம் தொண்டர்களிடம் பேசும்போது இளைஞர்கள் கூடுதல் கவனமும் கொடுப்பதாக பார்க்கப்படுகிறது. இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமெரிக்காவில் இருந்த போது பின்பற்றினார். தற்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகளை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் உரையாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொன்விழா நிறைவு
நாளை அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதற்காக பொதுக் கூட்டங்கள், விழாக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக தகவல் தொழிற்நுட்ப அணி சார்பாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் முக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சியில், பொன்விழா கண்ட அஇஅதிமுக எனும் தலைப்பில் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு 7.40 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications