சென்னையில் பயங்கரம்.. வீட்டில் இருந்த ரவுடியை தாய் கண் முன்னே வெட்டி கொலை செய்த கும்பல்!
சென்னை: வீட்டில் இருந்த பிரபல ரவுடியை மூளை தெறிக்க வெட்டி கொலை செய்து தப்பியோடிய ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு, சபாபதி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் ராமச்சந்திரன்(29), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது மடிப்பாக்கத்தில் கொலை வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் கைதான இவர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், பழவந்தாங்கல் காவல்நிலைய வழக்கு தொடர்பாக ஆலந்துார் நீதிமன்றம் சென்று மதியம் அவர் வீடு திரும்பினார்.

சம்பவ இடத்தில் பலி
பாண்டுரங்கனை வீட்டின் உள்ளே புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில், பாண்டுரங்கன் மூளை தெறித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தாய் காயம்
மகனை காப்பாற்ற முயன்ற அவரின் தாய் சுந்தரிக்கு வலது கையில் வெட்டு விழுந்தது. காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பியோடியது. தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார், ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடிப்பாக்கம் போலீசார்
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனுக்கும், பழவந்தாங்கல் சரித்திர பதிவேடு குற்றவாளியான வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை
மேலும், ராமச்சந்திரன் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலை நடந்த நேரத்தில் பதிவான காட்சிகளை பார்த்ததில் வசந்தகுமாரின் உருவம் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications