திமுகவின் 'தேர்தல் நாயகி' இன்று ரிலீஸ்.. 2019-ல் அசர வைத்த அந்த 15 தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்!
சென்னை: 18-வது லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளது. திமுகவின் வேட்பாளர் பட்டியலுடன் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது. தமிழக தேர்தல் களங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது.
தமிழ்நாடு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் களங்களில் களங்களின் போக்கையே மாற்றக் கூடியதாக தேர்தல் அறிக்கைகள் அமைந்துவிடுகின்றன. திமுகவின் அதிரடியான தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் பெரும் பரபரப்பையும் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்து வருவது வரலாறு.

தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான குழு தயாரித்து உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பயணம் செய்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் , டி.ஆர்.பி.இராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,, மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த கனிமொழி எம்பி, திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலின் கதாநாயகனாக இருக்குமா? என செய்தியாளர்கள் கேட்கிறீர்கள். அது கதாநாயகியாகவும் இருக்கலாம் என தந்தை கருணாநிதியின் பாணியில் பதிலளித்திருந்தார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் திமுக 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த 15 முக்கியமான வாக்குறுதிகள்:
1. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
2. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை
3. மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.
4. மத்திய நிதிக்குழுவின் அமைப்பும் பணிகளும் மாநிலங்களிடையேயான மன்றங்களால் வரையறுக்கப்பட வேண்டும்.
5. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
6. தொழிலாளர் ஊதிய திட்டத்தின் குறைந்தபட்ச தொகையாக ரூ,8,000.
7. மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம்
8. மத்திய மாநில அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
9. சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை.
10. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை
11. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை; மாணவர்களின் கல்விக்கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை
12. கிராம பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லாமல் ரூ50,000 கடன்.
13. இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை
14. தேசிய நெடுஞ்சாலைக பராமரிப்பில்1 கோடி சாலை பணியாளர்கள் நியமனம்
15. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்த 15 முக்கியமான அறிக்கைகள் இடம் பெற்றிருந்தன. தற்போதைய திமுக ஆட்சியில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications