Flash Back: சீமான் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி- சிக்கி சிறைக்கு போன ஹரிநாடார்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவி நான்; என்னை ஏமாற்றிவிட்ட சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீசில் புகார் கொடுத்து மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி, தாமே சீமானின் மனைவி; தற்போதைய மனைவி கயல்விழிக்காக பொறுமை காக்கிறேன். எனக்கு சீமான் ஒரு நீதி வழங்க வேண்டும் என்றெல்லாம் இடைவிடாமல் வீடியோ பதிவுகள் வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் நடந்தன. சில நேரங்களில் சீமானை ஒருமையில் விமர்சித்தும் வீடியோக்களை விஜயலட்சுமி வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று திடீரென சென்னை போலீசில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜயலட்சுமி புகார் மனு கொடுத்துள்ளார். அவருடன் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி, சீமான் விவகாரத்தில் தற்கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, என்னால் வாழ முடியவில்லை; என் சாவுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், பனங்காட்டுப் படை ஹரி நாடாருமே காரணம் என கூறியிருந்தார். இதன் பின்னர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாகவும் ஒரு வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார். அப்போது கருத்து தெரிவித்த சீமான், எனக்கு குரல் கொடு என நானா ஹரிநாடாரை கேட்டேனா? அவர் எதற்காக இதில் தலையிட்டார்? நானா தலையிட சொன்னேன் எனவும் சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications