ப்ளாஷ்பேக்... சர்ச்சை சசிகலா புஷ்பாவுக்காக அதகளமாடிய அன்றைய பாடிகார்ட் ஹரிநாடார் இப்போ சிறையில்!
சென்னை: தற்போது வீட்டு படுக்கை அறையில் மர்ம நபர்களை அனுமதித்த சர்ச்சையில் இருக்கும் பாஜகவின் சசிகலா புஷ்பாவுக்கு ஒருகாலத்தில் பாதுகாவலராக இருந்தவர் இப்போது சீட்டிங் கேஸில் சிக்கி பெங்களூரு சிறையில் இருக்கும் நடமாடும் நகை கடை ஹரிநாடார்.
சில காலம் நாடார் மக்கள் சக்தி இயக்கம்.. பின்னர் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.. இப்படி அறியப்பட்டவர்தான் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரிநாடார். நீண்ட தலைமுடி சகிதம் கழுத்து நிறைய கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு ஊடகங்களில் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டிருந்தவர் ஹரிநாடார்
2016-ல் அதிமுக எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவுக்கு எதிராக ராஜ்யசபாவில் குரல் எழுப்பினார். ஜெயலலிதாவும் சசிகலாவும் தம்மை தாக்கியதாக பகிரங்கமாக குரல் எழுப்பிய சசிகலா புஷ்பாவுக்கு அதிகமான மிரட்டல்கள் விடப்பட்டன.

பாடிகார்ட் ஹரிநாடார்
அந்த காலகட்டத்தில் சசிகலா புஷ்பா தமிழகம் வருகின்ற போது அவருக்கு பாதுகாப்பு படையாக அடியாட்களை அழைத்துக் கொண்டு வந்தவரும் இந்த ஹரிநாடார்தான். சசிகலா புஷ்பாவுக்காக அடிதடி மிரட்டல் என அடுத்த களத்துக்கும் போய் அதகளப்படுத்தினார் ஹரிநாடார். அதிலும் வக்கீல் சுகந்தி ஜெய்சன் விவகாரத்தில் ஹரிநாடார் ருத்ரதாண்டவமாடப் போய் குண்டாஸ் சட்டத்தை சந்திக்கவும் நேரிட்டதுதான் சுவாரசியம்.

சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார்
சசிகலா புஷ்பா மீது அப்படி என்ன பணிப்பெண்கள் புகார் கொடுத்தார்கள்? தூத்துக்குடி போலீசில் 2016-ல் அந்த பணிப்பெண்கள் கொடுத்த புகாரில், நான், 2011-ல் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு வேலைக்குப் போனேன். மதுபோதையில் வரும் சசிகலா புஷ்பாவுக்கு நிர்வாண மசாஜ் செய்ய வேண்டும்; அவரது கணவருக்கு ஆண் உறுப்பில் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்; சசிகலா புஷ்பாவின் 18 வயது மகனின் பாலியல் தொல்லைகளை சகித்துக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்தனர் என பரபரப்பு புகாரை கூறியிருந்தார்.

வக்கீல் வீடு மீது தாக்குதல்- குண்டர் சட்டம்
இந்த பணிப்பெண் சார்பில் ஆஜராகி வாதாடியவர்தான் வக்கீல் சுகந்தி ஜெய்சன். சசிகலா புஷ்பாவுக்கு சட்ட ரீதியாக நெருக்கடியை கொடுத்தார் என்பதற்காக சுகந்தி ஜெய்சன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் ஹரிநாடார் முதலில் சிக்கினார். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சசிகலா புஷ்பாவுக்கு ஏன் பாதுகாப்பு தருகிறீர்கள் என ஊடகம் ஒன்று கேட்ட போது, ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில், அவரை எதிர்த்து நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தவர் சசிகலா புஷ்பா. அவருக்கு நிறைய மிரட்டல்கள் வந்தன. முட்டை, தக்காளியை எறிந்து அவரை அசிங்கப்படுத்த நினைத்தார்கள். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாதுகாப்பு கொடுத்தேன் என்றார் ஹரிநாடார். பின்னர் சசிகலா புஷ்பா பாஜக பக்கம் போய்விட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சிக்கு போய்விட்டார்.

சிறையில் ஹரிநாடார்- சர்ச்சையில் சசிகலா புஷ்பா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீட்டிங் கேஸில் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிநாடார். அண்மையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக நடிகை விஜயலட்சுமியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருந்தார். இப்போது சசிகலா புஷ்பா மீதும் அவரது 2-வது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். வீட்டு படுக்கை அறையில் தமக்கு தெரியாமல் மர்ம நபர்களை அனுமதித்த சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 2-வது கணவர் ராமசாமியின் புகார்.. அக்கா தம்பிக்கு ஒரே நேரத்தில் சோதனை!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications