விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம்.. விஜயகாந்த் சொன்ன காரணம் தான் ஹைலைட்.. பிளாஷ்பேக்
சென்னை: விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ இப்போது அதிக மக்களால் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் மிகவும் முக்கியமாக இன்றைக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையும் அதை சார்ந்த தொழில்களையுமே செய்து வருகிறார்கள். விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிகப்படியான விளைச்சல் காரணமாக விலைகள் கிடைப்பது இல்லை. பருவ நிலை மாற்றம் காரணமாக விளைச்சல் குறைவதோ அல்லது அதிகமாகுவதோ நடக்கிறது. அதே நேரம் விதை, உரம் பூச்சி கொல்லி மருந்து, அறுப்பு கூலி ஆகியவற்றை கணக்கு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சுவது இல்லை. லாபம் இல்லாத தொழிலாளாக பல வருடங்களாக விவசாயம் இந்தியாவில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆய்வுகளின் படி, மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான் இதுவரை பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறதாம். இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம் மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள் பாசனம் பெறுகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது 8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது. சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன,
90 சதவீத இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில் கிணற்றுப்பாசனம் அழிந்து போய்விட்டது. மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன. சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம் ஆதாரமாக உள்ளதாக கூறப்ட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன. மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.
பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் காணப்படுகிறது
இந்த சூழலில் விவசாயிகள் கஷ்டத்தை விஜயகாந்த் ஒரு முறை பேசிய பழைய வீடியோ இப்போது பரவி வருகிறது. அதில் விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம் என்று விஜயகாந்த் கூறியிருப்பார்.
அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறுகையில், ஒரு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கு என்று வையுங்கள். நானே ஒரு தாய் தகப்பனாக இருக்கிறேன்னு வச்சுக்கங்க.. எனக்கு பூர்வீகமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கு.எனக்கு கல்யாணம் ஆகுது. எனக்கு பிள்ளை பிறக்குது.. அந்த பிள்ளை குட்டிகளுக்கு பிள்ளை குட்டிகள் பிறக்குது.. அதே இரண்டு ஏக்கர் வருமானத்தை வச்சு குடும்பத்தை நடத்த முடியுமா? அவங்களும் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க.. அவங்களுக்கு படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கனும், வேலை வரனும்னா தொழிற்சாலை வரனும்." என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக மக்களால் பகிரப்படுகிறது.
விவசாயத்தை விட ஏன் தொழிற்சாலைகள் முக்கியம் - கேப்டன் 🔥❤ pic.twitter.com/4H9wFRhDWi
— Newman (@roadoram) May 29, 2023
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications