"கட்டுக்கோப்பான இயக்கம்" கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது.. கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு
சென்னை: கழக பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் எதிலும் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படும் வகையிலும் மக்களுக்கு இடையூறாகவும் பேனர்கள், கட் அவுட்கள்,பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்றும் இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்டிட வேண்டும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட்கள், பேனர்கள் போன்றவை வைக்க தடை விதிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளார் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-

அதிமுக ஆட்சியின் போது
கடந்த 2019 ல் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது பேனர் கலாசாரத்தால் இருவர் உயிரிழந்தனர். அப்போது திமுக பொதுக்கூட்டங்கள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று 13.09.2019 அன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அன்றைய நாள் முதல் கட்சியினர் பலரும் தலைவர் உத்தரவினை பின்பற்றி வந்தனர். மீறியவர்கள் மீது கட்சி நடவடிக்கையும் எடுத்தது.

கட் அவுட்கள் வைக்கக் கூடாது.
இந்த நிலையில், ஒரு சிலர் தற்போது தலைவர் உள்ளிட்ட கட்சி முன்னோடிகள் பங்கேற்கும் நிகச்சிகளில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வண்ணம் பேனர், கட் அவுட், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதாக தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கழக பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் எதிலும் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படும் வகையிலும் மக்களுக்கு இடையூறாகவும் பேனர்கள், கட் அவுட்கள், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
திமுக தலைவரின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாராவது மீறியதாக கட்சியினுடைய தலைமை அலுவலகத்திற்கு புகார் வருமேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கட்சியினர் இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்டிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்
திருச்சி மாநகராட்சியால் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கல்வெட்டு, பதாகைகளில் அதே பகுதியில் வசித்து வரும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் எம்பி திருச்சி சிவாவின் பெயர், படம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையம் வரை பிரச்சினை சென்றது. இந்த நிலையில் திமுக தலைமை பேனர்கள் வைக்க கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications