ஃபிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்த இளைஞர்.. பார்சலை திறந்து பார்த்தால்.. செம அதிர்ச்சி..!
பிளிப்கார்ட் ஆஃபர் கேமிரா ஆடர் செய்த பார்சலில், பெயிண்ட் டப்பா வந்துள்ளது
சென்னை: பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேனான் 300D கேமிரா ஆடர் செய்த பார்சலில், பெயிண்ட் டப்பா இருந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்... புதுவண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

போட்டோ எடுக்கும் ஆசையில் ஃபிளிப்கார்ட்டில் வந்த ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் EOS 3000 D ரக கேமராவை ஆர்டர் செய்துள்ளார்... இதற்காக 12 மாதங்கள் இ.எம்.ஐ. தவணையையும் பதிவு செய்துள்ளார்.
அதன்படி, இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் வந்தது.. வினோத் என்ற டெலிவரி ஊழியர், அந்த பார்சலை கொடுத்துள்ளார்... எடை குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த வினோத் அந்த சீலிடப்பட்ட பார்சலை உடனடியாக பிரித்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கேமராவுக்கு பதிலாக குழந்தைகள் விளையாடும் பழைய பிளாஸ்டிக் கேமராவும், லென்ஸிற்கு பதிலாக பெயிண்ட் டப்பாவும் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்... இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்...
வினோத்தின் புகாரின் பேரில் இந்த குளறுபடிக்கு காரணம் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருகிறது.. இதனால், பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications