கூட்டுறவு சங்க தலைவர்களை பொம்மையாக்கிய திமுக! டிடிவி தினகரன் காட்டமான விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்க தலைவர்களை பொம்மையாக வைத்து கொண்டு அதிகாரிகளின் மூலம் ஆட்சி நடத்த நினைப்பது ஏன் என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 39 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 116 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சங்கங்கங்களில் தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதன்பின் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தலைவர் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும்.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

இந்நிலையில் தான் கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்து திமுக அரசு மசோதா நிறைவேற்றது. இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதிகாரம் குறைப்பு

அதிகாரம் குறைப்பு

அதில், ‛‛தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை பொறுத்தவரை அதன் செயலரே தலைமை அலுவலர். இதனால் சங்க தலைவரின் கையொப்பம் தனியாகவோ அல்லது சங்க செயலருடன் கூட்டாகவோ பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சங்க ஒழுங்கு முறை விதிகளில் தலைவரின் கூட்டு கையொப்பம் பெற வேண்டும் என இருந்தால் அதை நீக்க வேண்டும். இனி சங்கங்களில் இருந்து சங்க தலைவர் கையொப்பமிட்டு காசோலைகள் வந்தால், வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது. அவ்வாறான காசோலைகளை திருப்பி அனுப்ப வேண்டும். ''என கூறப்பட்டுள்ளது.

டிடிவி கண்டிப்பு

டிடிவி கண்டிப்பு

இந்த நடவடிக்கையின் பின்னணியில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் அதிமுகவினராக இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டித்து இருந்தார். இவரை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

 பொம்மையாக வைத்து...

பொம்மையாக வைத்து...

‛‛கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலத்தை ஆட்சிக்கு வந்தவுடன் குறைத்த திமுக அரசு, தற்போது அவர்களின் அதிகாரத்தையும் பறித்திருப்பது கண்டனத்துக்குரியது. சுயாட்சி, கூட்டாட்சி என வாய்கிழிய பேசி ஜனநாயகத்தின் காவலர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும் திமுக கூட்டுறவு சங்க தவைர்களை வெறும் பொம்மையாக வைத்து கொண்டு அதிகாரிகளின் மூலம் ஆட்சி நடத்த நினைப்பது ஏன். கூட்டுறவு என்கிற சித்தாந்தத்தின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால் காசோலைகளில் கையெழுத்திடும் கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+