Kollangudi Karuppayi: ஆண் பாவம் நடிகை! நாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
சென்னை: நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி தனது வயது மூப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 99. அவர் தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
சிவகங்கை மாவட்டம் மதுரை- தொண்டியில் கொல்லங்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர் கருப்பாயி. இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இவர் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட படங்களிலும் கொல்லங்குடி கருப்பாயி நடித்துள்ளார். இவருக்கு 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதலே வறுமையில் வாடி வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொல்லங்குடி கருப்பாயி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், என் அம்மா அப்பா என்னை படிக்க வைக்கவில்லை. சாணி அள்ளுதல், மாடு மேய்த்தல், ஊர் மந்தையில் விளையாடி பொழுதைக் கழித்தல் உள்ளிட்டவைகளிலேயே என் இளமை காலம் போனது.
7 வயது முதலே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல எனக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து பாடினேன். எம்ஜிஆர், ராஜீவ் காந்தி காலமான போது நான் மார்பில் அடித்துக் கொண்டு பாடிய பாடலை ஊரே அதிசயமாக கேட்டது. பர்மா கலவரத்தின் போது கால்நடையாகவே கொல்லங்குடிக்கு அத்தை, மாமா பிள்ளைகளில் ஒருவர்தான் நான் கல்யாணம் செய்து கொண்ட கணவர்.
எனக்கு 14 வயசுல திருமணமானது. நான் கலைமாமணி விருது வாங்குறதுக்கு காரணமாக இருந்தவரும் என் கணவர்தான். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் அக்கா பிள்ளைதான் என்னை பார்த்துகிட்டு இருந்தாள், அவளும் கார் விபத்தில் இறந்துவிட்டாள் என கூறிய இவருடைய கணவரும் விபத்தில் இறந்துவிட்டார்.
கருப்பாயி சென்னை வந்தாலே அவரை பார்க்காமல் இருக்க மாட்டாராம் பாண்டியராஜன். அது போல் கருப்பாயிக்கு நடிகர் சங்கத்துல உறுப்பினராக்கி அடையாள அட்டை வாங்கிக் கொடுத்ததும் விஷால்தானாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications