அடி தூள்! காலை உணவு திட்டத்தில் ‘மெனு’ சேஞ்ச்.. வாரத்தில் 2 நாட்கள் சிறுதானியங்கள் வழங்க பரிந்துரை!
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தினசரி உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவு பட்டியலின்படி, வாரத்திற்கு இரண்டு முறை சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வழங்க அறிவுறுத்தப்பட்டுடுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரையில் தொடங்கப்பட்டது. முதலில் 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகளில் அமைந்துள்ள 539 பள்ளிகளில் பயிலும் 50 ஆயிரத்து 306 மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
அடுத்த கட்டமாக 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர். தினசரி காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404.
காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை உணவு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தினசரி உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை ரவா உப்புமா / சேமியா உப்புமா/ அரிசி உப்புமா/ கோதுமை ரவை உப்புமாவும், செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவையும், புதன்கிழமை, காய்கறி சம்பாருடன் கூடிய ரவா பொங்கல்/ வெண் பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வியாழக்கிழமை, காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா/ ரவா உப்புமா /கோதுமை உப்புமா ஆகியவையும் வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வாரத்தில் குறைந்தது 2 நாட்களிலாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம், ஒரு மாணவ/மாணவியருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி/ ரவை/ கோதுமை ரவை + காய்கறிகள் என வழங்கவேண்டும். சமைத்த பின் உணவு 150-200 கிராம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications