பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்! ரெய்டு விட்ட உணவு பாதுகாப்பு துறை.. அலறிய சென்னை
சென்னை: சென்னை கொடுங்கையூரில் பிரபல பிரியாணி கடையில், பிரியாணி வாங்கி சாப்பிட்ட நான்கு பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதாரமற்ற உணவு: சமீப நாட்களாக ஓட்டல் உணவுகள் பலருக்கும் உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஃபாஸ்ட் புட் சாப்பிடுபவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சுகாதாரமற்ற உணவுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் தயாரிப்பதில்லை என்றும், எனவே அடிக்கடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வந்தி மயக்கம்: இந்நிலையில் சென்னையில் ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் என உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது கொடுங்கையூரை சேர்ந்த ரஞ்சித் குமார், இந்த பிரியாணி கடையில், குடும்பத்தினருக்காக பிரியாணியும், தந்தூரி சிக்கனையும் வாங்கி சென்றிருக்கிறார். வீட்டிற்கு வந்து அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் குடும்பத்தில் இருந்த 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதி: இதனையடுத்து இவர்களது உறவினர்கள், இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதேபோல இந்த குறிப்பிட்ட பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட வியாசர்பாடியை சேர்ந்தவருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால்தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
ரெய்டு: இதனையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சதீஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையின்போது உடலுக்கு புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பிருக்கும் ரசாயன பொருட்கள் உணவில் கலக்கபபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரியாணி கடையின் ஊழியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனரர்.
கோரிக்கை: மிகவும் பிரபலமான பிரியாணி கடையில், உணவு வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications