1000 ரூபாய் பொங்கல் பரிசு! முதல்வர் உத்தரவிட்டும்! அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படவில்லை
சென்னை: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் ரேஷன் கடைகளில் வழங்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அதிமுக, திமுக அரசு என யார் இருந்தாலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு என பொங்கல் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். அத்துடன் பரிசுத் தொகையாக ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ 2000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து திமுக ஆட்சியில் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசை அதிமுக கொடுத்தது. அப்போதும் சரி 2023 ஆம் ஆண்டும் சரி ரூ 1000 பொங்கல் பரிசு வெறும் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஒரு முழு கரும்பு, இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன அப்போது வெள்ள நிவாரணம் ரூ 6000 பெற்றவர்கள், மகளிர் உதவித் தொகை பெறும் அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தமிழக அரசு பரிசீலனை செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
இதையடுத்து இன்றைய தினம் அரிசி அட்டை இல்லாத சர்க்கரை அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கன் கேட்டனர். அப்போது ரேஷன் அட்டைதாரர்கள் வழக்கம் போல் உங்கள் பெயர் லிஸ்டில் இல்லை, அதனால் உங்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடையாது என்றனர். நேற்றைய தினம் முதல்வர் அறிவித்தாரே பிறகும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு ரேஷன் கடை ஊழியர்களோ எங்களுக்கு அது போல் எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. லிஸ்டில் பெயர் இருப்போருக்கு மட்டும் கொடுக்குமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டதால் அதை வைத்துத்தான் கொடுக்கிறோம் என தெரிவித்தனர். இதனால் மக்கள் தொண்டை தண்ணீர் வற்றும் வரை வாதாடி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
முதலில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு என அறிவிக்கப்பட்டதால் குறைந்த அளவுக்கே பொருட்கள் கொள்முதலும் வங்கிகளில் ரொக்கம் எடுப்பதும் இருந்திருக்கும். எனவே ஒன்று தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு என அறிவிப்பதற்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பின்னர் அறிவித்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை விடுத்திருக்க வேண்டும். எதுவும் இல்லாவிட்டாலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த தேதியிலிருந்து டோக்கன் விநியோகம் செய்யப்படும். அப்போது போய் பெற்றுக் கொள்ளலாம் என்றாவது அறிவித்திருக்க வேண்டும். இப்படி எதுவும் இல்லாமல் மொட்டைத் தாத்தா குட்டை விழுந்த கதையாக அறிவித்தால் எப்படி?
இதனால் நிறைய பேரின் நேரம் வீணாகிறது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துவிட்டு உங்களுக்கு பரிசு கிடையாது என சொல்லும் போது தேவைற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் ரேஷன் கடை ஊழியர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முதல்வரே அனைத்து கார்டுகளுக்கும் ரூ 1000 என அறிவித்த போது உங்களுக்கு கிடையாது என சொல்ல இவர்கள் யார்?
இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? "நேற்றுதான் முதல்வர் உத்தரவிட்டுள்ளார், இதன் பிறகு எங்களுக்கு அரசாணை கிடைக்கும். உங்கள் பெயர்களும் பட்டியலில் இடம்பெறும். எனவே இருநாட்கள் காத்திருங்கள் என கண்ணியமாக சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இவர்கள் வீட்டு பணத்தை எடுத்துக் கொடுப்பது போல் பொதுமக்களிடம் கறார் காட்டினால் என்ன அர்த்தம்?
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications