பிரியா மரணம் : மருத்துவ அறிக்கையில் வெளிவரும் ‘பகீர்’ தகவல்கள்.. இன்னும் பலர் சிக்குகிறார்கள்..?
சென்னை : மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாகவே மாணவி பிரியா உயிரிழந்தார் என்றும், மேலும் பலரும் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் என்றும் பிரியா மரணம் தொடர்பான மருத்துவக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பரபர தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையில், மாணவி பிரியாவுக்கு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த செவிலியர், சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் கவனக் குறைவாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவக் குழு அறிக்கையை அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் என பதியப்பட்ட வழக்கு, அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கால்பந்து வீராங்கனை பிரியா
சென்னை வியாசார்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா, கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர். ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியாவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி பிரியாவுக்கு கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்தபோது தவறான சிகிச்சை அளித்ததால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நவம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

மரணத்திற்கு காரணம்?
மாணவி பிரியாவின் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என்றும் மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து, பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மருத்துவக் குழு
பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174ன் கீழ் பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. மாணவியின் மரணம் குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கவனக்குறைவே காரணம்
இந்நிலையில், மாணவி பிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கை நேற்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததற்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலரும் சிக்குகிறார்கள்
மாணவிக்கு அளித்த சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்டவர்களின் பட்டியலில், அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் தவிர, மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், அன்றைய தினம் மருத்துவமனையில் இருந்த மருத்துவ அதிகாரி, அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்புமுறிவு பிரிவில் இருந்த மருத்துவ அதிகாரி, அறுவை சிகிச்சைகுப் பிறகு, பிரியா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கவனக்குறைவாக செயல்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு பிரிவு மாற்றம்?
மாணவி பிரியாவின் மரணம் ஏற்கெனவே சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை இந்த மருத்துவ அறிக்கையின்படி, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி, அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்குப் பிரிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை?
மேலும், மருத்துவ அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும். இந்த சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாணவி அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications