விஜய் பொண்டாட்டி எங்கே? ஆதவ் அர்ஜுனா சட்டையைக் கிழிப்போம்! ஹை வோல்டேஜில் பொங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்!
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற போது அவர் மனைவியும், குழந்தைகளும் எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடிக்கு வந்தால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சட்டை கிழிக்கப்படும் எனவும், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் இனி கரியை பூசுவார்கள் என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளா5.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் எதிரே நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் திமுகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அனிதா ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அப்போது பேசிய அவர்," எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது உள்ள சூழலில் அந்த நடிகரைப் பற்றி பேசுவதை விட நம்மிடமிருந்து பிரிந்து சென்ற அந்த துரோகிகளை பற்றி பேச வேண்டாமா? உங்கள் தலைவர் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று கூறிய எங்கள் தலைவரை மறந்து விட்டாயா?. எங்கள் தலைவருக்கு அல்வா கொடுத்து கட்டிப்பிடித்தாயே. அதை மறந்த காங்கிரஸ் துரோகிகளே! உங்களைப் போல் துரோகி நாட்டில் உண்டா?
காங்கிரஸ்
இனி ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என்று சொன்னால் அவர் எப்படி வர முடியும். எப்படி வருவார். மத அடிப்படையில் வேஷம் போட்டு தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என்று ராகுல் காந்தி இருக்கிறார். ராகுல் காந்தி அவர்களே தமிழ்நாட்டு மக்கள் இனி உங்கள் முகத்தில் கருப்பை பூசுவார்களே தவிர இனி ஒரு காலமும் உங்களால் வெற்றி பெற முடியாது. சோனியா காந்தி நல்ல அம்மா. அவர்களை ஒன்றும் சொல்லக்கூடாது. உங்களது பாட்டி இந்திரா காந்தி அவர்களையே சந்தித்த திராவிடர் முன்னேற்ற கழகம் எவ்வளவு பெரிய துரோகம் செய்து உள்ளீர்கள்.
கேசி வேணுகோபால்
எப்படி ஓடிப்போய் இந்த ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்தீர்கள். பொட்ட பயலாக இருந்தால் நீங்கள் தேர்தலுக்கு முன்பே நாங்கள் உங்களோடு கூட்டணி வைக்கவில்லை என்று கூற வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எங்கள் இயக்கத்துடன் சேர்ந்து எங்கள் இயக்கத் தோழர்கள் கஷ்டப்பட்டு உங்கள் ஐந்து பேரை வெற்றி பெற வைத்தால் ஓடிப்போய் சேர்கிறீர்களே. கேசி வேணுகோபால் என்ன கடவுளா? எங்கேயோ டெல்லியில் இருந்து வந்த அவர் கேரளாவிற்கு சென்று முதல்வர் வேண்டுமென்று கேட்டால் கொடுப்பார்களா?
திமுக
திமுகவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் சோடங்கர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறீர்களா? கனவு காணாதீர்கள் எங்கள் தலைவர் இருக்கின்றார். எங்கள் இளம் தலைவர் இருக்கின்றார். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் என்று யார் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம்.
ஆதவ் அர்ஜுனா
தற்போது லாட்டரி காரன் ஒருவன் முளைத்திருக்கிறான். அவன் எங்கள் இளம் தலைவரை தொட்டுப் பார்க்கிறான். யாரை தொட்டு பார்க்கிறாய். இனி இது போல் நீ பேசினால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு நீ வரும் போது உனது சட்டையை கிழிக்கக்கூடிய நிலையை எங்கள் தொண்டர்கள் உருவாக்குவார்கள். நீ அரசியல் பேசு, எங்களை குறை கூறு. நாங்கள் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுத்து வந்தோம், நீ 2500 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னாய் கொடுத்தாயா ? அதை விட்டுவிட்டு எங்கள் இளம் தலைவரை தொட்டுப் பார்க்கிறாயா.
திருச்செந்தூர் தொகுதி
பாராளுமன்ற தேர்தலில் வருவதற்காக நீ கனவு காண்கிறாய். ஆனால் நகராட்சி தேர்தலில் கூட உன்னால் வர முடியாது. தேர்தலுக்கு முன்பே நான் கூறினேனா இல்லையா திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது என்று. வருகின்ற காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சியை இல்லாத நிலையை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications