தமிழகத்தில் முதல்முறை! எண்முறை தொழில்நுட்பத்தில் வளிமகாப்பு துணைமின் நிலையம்'! அப்படியென்ன ஸ்பெஷல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலேயே முதன்முறையாக, சென்னை திருவான்மியூரில் 'எண்முறை தொழில் நுட்பத்தில்" (Digital Technology) அமைக்கப்பட்டு வரும் 230/33 கிலோ வோல்ட் வளிம காப்பு {Digital Gas Insulated Substation) துணைமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார்.

அது என்ன எண்முறை தொழில் நுட்பத்தில் வளிம காப்பு {Digital Gas Insulated Substation) துணைமின் நிலையம் என்று கேள்வி பலருக்கும் எழலாம்.

இந்த துணை மின்நிலைய பணிகள் மட்டும் முடிவடைந்தால் சென்னை தரமணி, பெசன்ட் நகர், காந்திநகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதிகளிலுள்ள சுமார் 4 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு துறை சார்ந்த அலுவல் பணிகளை கவனிப்பதுடன் களம் சார்ந்த ஆய்வுப் பணிகளிலும் தீவிரம் காட்டுகிறார் தங்கம் தென்னரசு.

For the first time in Tamil Nadu, Digital Gas Insulated Substation built in chennai thiruvamiyur

தரமணியில் 708 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400/230/110/33 கிவோ வளிமகாப்பு (Gas Insulated Substation) துணைமின் நிலையமாக தரம் உயர்த்தி மேம்படுத்த நடந்து வரும் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து துணைமின் நிலையத்தினை பார்வையிட்ட அவர் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

இந்தப் பணிகள் முடிவடைந்தால் இன்னும் கூடுதல் மின் நுகர்வோர்களுக்கும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பமானது சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் விரைவில் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் அதிவேக வளர்ச்சி பெற்று வருவதால் பெருகி வரும் மின்தேவையைக் கருத்தில் கொண்டு செந்தில்பாலாஜி மின் துறையை நிர்வகித்த போது இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே அதனை விரைந்து முடித்து புதிய துணைமின் நிலையங்களை இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+