தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறை... விஜய் ஏற்படுத்திய தாக்கம்.. தொங்கு சட்டசபை என்றால் என்ன?
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு 'பரபரப்பு' நிலையை நோக்கி 2026 நகர்கிறது .காரணம் விஜய் வருகை தான்.. "தொங்கு சட்டசபை" என்ற வார்த்தை தமிழக அரசில் களததில் அதிகம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. விஜய் வருகையால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காதா..தொங்கு சட்டசபை என்றால் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தொங்கு சட்டசபை என்றால் என்ன?
ஒரு மாநிலத்தின் மொத்தத் தொகுதிகளில், எந்தவொரு தனிக்கட்சியோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டணியோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (தமிழகத்தில் 234-ல் 118 இடங்கள்) பெறாத நிலையே 'தொங்கு சட்டசபை' என்று அழைப்ர்கள் இந்நிலை ஏற்படும்போது, சிறிய கட்சிகளின் ஆதரவு அல்லது 'குதிரை பேரம்' மூலமே ஆட்சி அமையும் சூழல் உருவாகும்.

விஜய் தான் முக்கிய காரணமாகலாம்
இந்த முறை எக்சிட் போல் முடிவுகள் எப்படி வரும் என்ற எதிபார்ப்பு அதிகமாக இருக்கிறது. பலரும் தொங்கு சட்டசபை வருமோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவிற்கு வாக்குப்பதிவு நாளான்று சம்பவங்கள் நடந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பலர் சொந்த ஊர் வந்து வாக்களித்துள்ளார்கள். பலர் விஜய்க்கு அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, பாரம்பரியமான திமுக - அதிமுக வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியிருக்குமோ என்ற ஐயம் பல அரசியல் நிபுணர்களுக்கே இருக்கிறது.
தமிழக அரசியல் களம் எப்போதும் 'பைனரி' என்று சொல்லப்படும் இருமுனைப் போட்டியிலேயே ஊறிப்போனது ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் அதை மாற்றுமோ என்ற ஐயம் இருக்கிறது எனெனில், விஜய் தலைமையிலான தவெக பெறப்போகும் வாக்கு சதவீதம், ஆளுங்கட்சியின் வெற்றியைத் தடுக்கும் 'ஸ்பாய்லர்' ஆக மட்டும் இல்லாமல், ஆட்சியையே தீர்மானிக்கும் 'கிங் மேக்கர்' டத்திற்கு அவரை நகர்த்தலாம் என்று சில அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஜய் தடுக்கும் அபாயமும் உள்ளது.
சென்னையில் எல்லாம் திமுகவின் பராம்பரிய வாக்குகளில் தவெக கைவைத்திருக்கும் என்று முன்னணி ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். இதனால் திமுக கூட்டணிக்குமே சவாலாக இருக்கலாம் என்கிறார்கள். இதில் அதிமுக நிலைமை எப்படி இருக்கும். யாருடைய வாக்கை தவெக தட்டி பறிக்க போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது தொங்கு சட்டசபையாக மாறும். டெல்லியில் 2013ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி கணிசமான இடங்களை பிடித்ததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்படியான ஒரு நிலை இதுவரை வந்தது இல்லை. இந்த முறை வருமா அல்லது இல்லையா என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும். எக்சிட் போல் முடிவுகளில் ஓரளவு கணிக்க முடியும் என்பதால், அதுவும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது.
-
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications