Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்எஸ்டிசியில் இதுவே முதல்முறை.. ஊருக்கு போறீங்களா.. போக்குவரத்து துறை செயலாளர் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்எஸ்டிசியில் முதன்முறையாக ஆன்லைன் முன்பதிவுக்கான பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், போக்குவரத்து துறை செயலாளருமான பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதி என்றால் அது சென்னை தான். எல்லா ஊர்களில் இருந்தும் பணி நிமித்தமாக சென்னை வந்து தங்கிய மக்கள், இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள். இதேபோல் கல்வி பயிலவும் ஏராளமானோர் வந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு மேல் வசித்து வருகிறார்கள்.

For the first time number of bus seats available for online reservation has crossed 1 lakh in TNSTC

இதனால் பொங்கல் அல்லது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது, மக்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு செல்வார்கள் . அப்படி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கோ, மேற்கு மாவட்டங்களுக்கோ செல்லும் மக்கள், ரயிலில் பயணிக்க விரும்பினால் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. ஏனெனில் ரயில்களில் 3 அல்லது 4 மாதத்திற்கு முன்பே டிக்கெட் விற்று தீர்ந்துவிடும். விமானக்கட்டணத்திற்கு நிகராக ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்ந்து உள்ளதால் மக்கள் அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர்.

தமிழக அரசும் ஒவ்வொரு சனி ஞாயிறு, தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்கும்.

சென்னையில் தினசரி அரசு சார்பில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி இயக்கப்படும் 2,100 விரைவு பஸ்களுக்கும் முன்பதிவு தொடங்கிய சில வாரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துபோனது. இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பஸ்களுடன் 4,706 சிறப்பு பஸ்களும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 19,484 பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் முதன்முறையாக ஆன்லைன் முன்பதிவுக்கான பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும், இதுவரை 8000க்கும் குறைவாகவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், போக்குவரத்து துறை செயலாளருமான பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார். டிஎன்எஸ்டிசியில் பயணங்களை சிறப்பாக திட்டமிடுவதற்காக, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு பயணிகளை பணீந்தர் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். மேலும் விரைவாக டிக்கெட் புக்கிங் செய்ய டிஎன்எஸ்டிசியின் ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து சிறப்பு பஸ்களும் (அரசு விரைவு பஸ்கள் நீங்கலாக) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

For the first time number of bus seats available for online reservation has crossed 1 lakh in TNSTC

சென்னை கோயம்பேட்டில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம், திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் செல்கின்றன.

அதேநேரம் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அரசு விரைவு பஸ்களில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோவை, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் பயணிக்கலாம். அரசு பஸ்களில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து ஏற முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு வந்துதான் ஏற வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+