பாமகவுக்கு ஆதரவாக வேல்முருகன் குரல்! பொலிடிக்கல் மிராக்கிள்! பரபரக்கும் தமிழக அரசியல் களம்!
சென்னை: பாமகவுடன் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்த வேல்முருகன் முதல்முறையாக அக்கட்சிக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பதோடு அன்புமணியை கைது செய்ததை ஒரு போதும் ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.
பாமகவிலிருந்து வெளியேறிய பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி தனிப்பாதையில் பயணித்து வரும் வேல்முருகன், தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார். இந்நிலையில் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசு மீதான அதிருப்தியை தனது அறிக்கையில் ககூறியிருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு: ''கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக, பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது.
இப்பணியில், 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணைபோடும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர பணி, மாற்று இடம்,ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்,தொழிற் பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் நிரந்தர பணி வழங்க வேண்டும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு விரிவாக்கும் பணியை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சிறிதும் மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில், சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், முற்றுகை போராட்டம் நடந்தது.
பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் நடந்த அமைதி வழியிலான போராட்டத்தின் போது, அன்புமணி உள்ளிட்ட பாமக தோழர்கள் மீது, தமிழ்நாடு காவலதுறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்ததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தோழர்களை மிரட்டிய காவல்துறை, அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இத்தகைய சர்வாதிகார போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ள விளைநிலங்கள் தயாராக இருக்கும் நிலையில், அதனை என்.எல்.சி நிறுவனம் அழித்தொழிப்பதை, தமிழ்நாடு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதற்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு துணைபோகும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, கைது செய்யப்பட்டுள்ள பாமக தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.''
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications