குறிக்கப்பட்ட நாள்.. சென்னைக்கு திரும்பி வரும் திமிங்கலம்.. மண்ணில் இருந்து எழுகிறது மறைமலைநகர்!
சென்னை: சென்னை மறைமலைநகரில் உள்ள போர்ட் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆண்டு ஜூன் - ஆகஸ்ட் இடையே உற்பத்தி மீண்டும் தொடங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர்ட் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவை எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளது. இதை திறப்பதற்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட கடந்த 4 வருட இருண்ட காலத்திற்கு பின் சென்னைக்கு போர்ட் திரும்பி வந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையின் தீவிரமான முயற்சியால்.. தொடர் பேச்சுவார்த்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொழிற்சாலை மூடல்
தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் போர்ட் திரும்பி வரும் அறிகுறி அப்போதே வழங்கப்பட்டதால் டாடா தனியாக முதலீடு செய்தது. தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல.. போர்ட் நிறுவனமும் திரும்பி உள்ளது. பெரும்பாலும் Mustang Mach-E வாகனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்: சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் உள்ள ஹென்றி ஃபோர்டு சாலை தற்போது மீண்டும் திமிறி எழுந்துள்ளது. 2022ல் ஃபோர்டு இந்தியா ஆலை செயல்படுவதை நிறுத்தியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது அந்த பகுதி.
தற்போது போர்ட் வருகை காரணமாக அங்கே புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமலை நகர் மாறியுள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகரில் குறைவாக வளர்ச்சியடைந்த பகுதி, இப்போது எட்டு வழிச் சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைக் கொண்டு பெரிய அளவில் மறைமலைநகர் முன்னேறி உள்ளது. முன்பு ஒரு சில தேநீர்க் கடைகள் மட்டுமே இங்கே இருந்தன. பாண்டலூன்ஸ் மற்றும் ட்ரெண்ட்ஸ் போன்ற பெரிய வணிகச் சங்கிலிகளும், கேஎஃப்சி, பர்கர் கிங் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவுச் கடைகள் இங்கே அதிக அளவில் வந்துள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இங்கே போர்ட் வருவது சென்னையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். அதோடு சென்னை விரிவடைய முக்கிய காரணமாக அமையும்.
டபுள் ஜாக்பாட்
போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. அடுத்த தலைமுறை எண்டெவர் கார்கள் இதன் மூலம் போர்ட் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Ford நிறுவனம் முதலீடுகள்; அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
முன்னதாக போர்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்.. நாங்கள் கண்டிப்பாக சென்னைக்கு திரும்புகிறோம். மீண்டும் ஆலையை திறப்பதற்கான கடைசி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அறிவித்து உள்ளது. சென்னையில் இருந்து இவி வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளனர். அதை வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்க
உள்ளனர். சென்னைக்கு போர்ட் திரும்பி வந்தாலும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்வது கடினம். அவர்கள் இந்திய மார்கெட்டிற்கு வர வாய்ப்பு இல்லை.
மாறாக சென்னையில் உற்பத்தி செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள். 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை யூனிட், ஆண்டுக்கு 200,000 வாகனங்கள் மற்றும் 340,000 இன்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications