மோசடி பத்திரங்கள்.. டிட்டோ அசல் ஆவணங்களே.. போலி பத்திரத்தை ரத்து செய்ய தயக்கமா? பதிவுத்துறையில் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசல் ஆவணங்களை போலவே, அச்சு அசல் போலியான ஆவணங்களை வைத்து, பத்திரப்பதிவு நடப்பது பெருகி கொண்டிருக்கிறது.. இப்படி போலியான பத்திரங்களின் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக பதிவுத்துறை எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மோசடி பத்திரங்கள் மீதான புகார்கள் குவிவதாகவும், அது தொடர்பாக விசாரணைகளில் தேக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதுகுறித்து பதிவுத்துறை தரப்பில் சொல்லப்படும் கருத்துக்கள் என்ன?

மோசடி பத்திரம் என்பது, ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி அந்த சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்துவிடுவதாகும்.. இதற்குதான் மோசடி பத்திரம் என்று பெயர்.

Forged Documents original deeds property

போலி உரிமை ஆவணம்

அதாவது, போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.. போலியாக பட்டா தயாரித்தாலும், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.

இதுபோன்ற மோசடியாக பதிவான பத்திரத்தை ரத்து செய்து, பாதிக்கப்பட்டவர் பெயருக்கு அந்த சொத்து மறுபடியும் செல்ல, பதிவுத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பதிவு சட்டத்தில், 77A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.. இந்த பிரிவினை பயன்படுத்தி, பதிவுத்துறையும் நடவடிக்கை எடுக்க துவங்கியது.

தமிழக பதிவுத்துறை

அந்தவகையில், மோசடி பத்திரங்கள் தொடர்பாக, 11,100 புகார்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகளும் தகவல் வெளியிட்டிருந்தனர்..

ஆனால், மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவது குறித்த வழக்கில், கடந்த வருடம் சென்னை ஹைகோர்ட் தடை விதித்திருந்தது. எனவே, மோசடி பத்திர புகார்கள் மீதான விசாரணையை நிறுத்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2023 அக்டோபரில் உத்தரவிட்டார்.

சொத்து பத்திரப்பதிவு

77A என்ற பிரிவு செல்லாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுவிட்டதால், மோசடி பத்திரங்கள் மீதான நடவடிக்கைகளில் தேக்கம் உருவாக தொடங்கிவிட்டது... இதனால், பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்..

இப்படிப்பட்ட சூழலில்தான், சிவகங்கையை சேர்ந்த முகமது அஷ்பக் என்பவர், தன் சொத்து தொடர்பாக மோசடி பத்திரம் பதிவாகியிருப்பதாக, மதுரை ஹைகோர்ட்டை நாடினார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் ஸ்ரீமதி தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு இதுதான்:

அசல் ஆவணங்கள்

"தன்னுடைய சொத்து தொடர்பாக மோசடியாக பத்திரம் பதிவாகி உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் மனுதாரர்... இது குறித்து மாவட்ட பதிவாளர், சார் - பதிவாளர் ஆகியோர், மனுதாரருக்கும், அவரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும், நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளலாம். பதிவு சட்டத்தின், 83வது பிரிவில் உள்ள வழிமுறையை பின்பற்றி, இதில் நடவடிக்கை எடுக்கலாம்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மோசடி பத்திரங்கள்

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கான, 77A பிரிவுக்கு மட்டும் தான் தடை உள்ளதே தவிர, 83வது பிரிவின் அடிப்படையில், மோசடி பத்திரப்பதிவு குறித்து விசாரிக்க தடை எதுவும் இல்லை.

மதுரை ஹைகோர்ட் அளித்துள்ள தீர்ப்பின்படி, குற்றவியல் சட்டப்படி, போலி ஆவணங்களை பயன்படுத்தியது, ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாகிறது. எனினும், இந்த சட்டப்பிரிவை சார் - பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் பயன்படுத்த தயங்குவதாக தெரிகிறது.. எனவே, இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரிகள்தான், உரிய அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்" என்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+