69% இட ஒதுக்கீடு கருணாநிதி கொடுத்ததா? சொல்லித் தருவதை பேசக் கூடாது பிரகாஷ் ராஜ்! ஜெயக்குமார் பொளேர்!
சென்னை: பிரகாஷ்ராஜ் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது எனவும், வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக தரப்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் கலைஞரை மீண்டும் நேரில் சந்திப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் 'காலம் உள்ளவரை கலைஞர்' என்ற கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ்: இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை. கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக போராடி வரும் நிலையில் எப்போதோ 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்" என பேசியிருந்தார்.
கண்டனம்: இந்நிலையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது கலைஞர் இல்லை என அதிமுகவினர் பிரகாஷ்ராஜுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு திரு.கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.
ஜெயக்குமார்: 69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்கள் சமூக நிதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார். பின்னர் சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன். இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய
இட ஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாண்புமிகு அம்மா தலைமையில் அன்றைய பிரதமர் திரு.நரசிம்ம ராவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24,அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடும் கண்டனம்: மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் அம்மா அவர்களுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார். இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமால் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது! மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு! இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்." என கூறியுள்ளார்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications