"அஜித்குமார் தந்தை சிறந்த பண்பாளர்" சுப்ரமணியம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியத்தின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித்குமாரின் தந்தை குறித்து ஜெயக்குமார் கூறுகையில், சுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும், அவர் சிறந்த பண்பாளர் என்றும் கூறினார்.
Recommended Video
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம். 86 வயதான அவர், இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் இன்று காலை அஜித்தின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் இறுதிச்சடங்கை கவனிக்க தொடங்கினர்.

அஜித்குமார் தந்தை மறைவு
சுப்ரமணியத்தின் உடல் இன்றே தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தரப்பில், தந்தை சுப்ரமணியத்தின் இறுதிசடங்கு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. வீட்டிலிருந்து மின் மயானத்துக்கு ஆம்னி வேனில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

உடல் தகனம்
பின்னர் மின் மயானத்தின் வாசலில் இருந்து அவரின் உடலை அஜித்குமார் சோகத்துடன் சுமந்து சென்றார். அதேபோல் எந்த பரபரப்பும் இல்லாமல் சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியத்தின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

ஜெயக்குமார் நேரில் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், பாசமிகு சகோதரர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது கவலையான செய்தியாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித்குமாரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். அவரின் தந்தையார் அவரை சிறப்பாக வளர்த்திருக்கிறார்.

சிறந்த பண்பாளர்
அஜித்குமாரின் தந்தையார் சிறந்த பண்பாளர். வீட்டில் செல்லும் போது இன்முகத்துடன் வரவேற்கும் குணம் கொண்டவர். விருந்தினர்களை கவனிக்கும் பண்புகளை நான் பகிர்ந்துகொண்டேன். அவரின் மறைவு வேதனையளிக்கக் கூடியது என்று தெரிவித்தார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications