கவனிச்சீங்களா! அதிமுக நிர்வாகிகள் லிஸ்ட்ல “அவர்” மிஸ்ஸிங் - திமுகவுடன் நெருக்கமா? ஆடியோல வந்துச்சே
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், அவரது பெயர் தற்போது வெளியாகியுள்ள நிர்வாகிகள் பட்டியலிலில் இடம்பெறவில்லை.
Recommended Video
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

துணை பொதுச்செயலாளர்கள்
இதனை தொடர்ந்து அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள துணை பொதுச்செயலாளர்களுக்கான பதவிகளை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அமைப்பு செயலாளர்கள்
பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொன்னையன் ஆடியோ
இந்த நிலையில் தற்போது அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள பொன்னையனின் தொலைபேசி உரையாடல் என்று கூறி, பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இதற்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்தாலும் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.பி.முனுசாமி மீது விமர்சனம்
அதில், "தொண்டர்கள் இரட்டை இலை பின்னால் நிற்கிறார்கள். தலைவர்கள் பணத்துக்காக நிற்கிறார்கள். பணத்தை பாதுகாப்பதற்காக டெல்லியை பிடித்துக்கொண்டு போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகிறார்கள். தங்கமணியும் தன்னை காப்பாற்றிக்கொள்ள மு.க.ஸ்டாலினை நோக்கி ஓடுகிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்." என்று தெரிவித்தார். அதேபோல் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

தங்கமணி பெயர் நீக்கம்
ஆனால், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று முறையே துணை பொதுச்செயலாளர், தலைமை கழக செயலாளர், அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று அந்த ஆடியோவில் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயர் புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications