Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 பவுன் நகை.. மனைவி புகாரில் திருப்பம்.. முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகன் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை கொடுமை என புகார் அளித்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தனின் மகன் சதீஷ்குமார் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மகன் கே.பி.கே சதீஷ்குமார். இவர் சென்னை பெருநகர மாநகராட்சியின் 182வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இதனிடையே முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தனின் மருமகளும், கவுன்சிலர் சதீஷ்குமாரின் மனைவியுமான சுருதி தரப்பில், அவரது தந்தை ஸ்ரீகாந்த் அண்மையில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் ஸ்ருதியின் மாமனார் கந்தன் மற்றும் கணவர் சதீஷ்குமார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Former AIADMK MLA KP Kandans son Satish Kumar demanding that action be taken against his wife

இது தொடர்பாக ஸ்ருதியின் தந்தை ஸ்ரீகாந்த் அளித்த புகார் மனுவில், , " என் பெயர் ஸ்ரீகாந்த், எனக்கு 58 வயது ஆகிறது. நான் மரக்கடை வைத்து வியாபாரம் செய்வதுடன் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறேன். என்னுடைய மகள் சுருதி பிரியதர்ஷினி, டாக்டராக பணி புரிந்து வருகிறார். எனது மகள் சுருதி பிரியதர்ஷினிக்கும், சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தனின் மகனான சென்னை மாநகராட்சி அதிமுக 182வது கவுன்சிலர் கே.பி.கே.சதிஷ்குமாருக்கும் திருமணம் செய்வது என கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயம் செய்தோம்.

கவுன்சிலர் கே பி.கே சதீஷ்குமாருக்கு வரதட்சணையாக ரொனால்டோ ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லட், தங்க செயின், வைர மோதிரம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும் என்று கேட்டார்கள். மேலும் வரதட்சணையாக மகளுக்கு குறைந்தபட்சம் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு 100 சவரன் தங்க நகைகளும், இரண்டு விலை உயர்ந்த கார்களும் அளிக்க வேண்டும் என்றும் திருமணம் அடையாரில் உள்ள ராமசந்திர கன்வென்சன் சென்டரில் நடத்த வேண்டும் என்றும் கேட்டார்கள்.

இதில் கேபி கந்தன் குடும்பம் மற்றும் எங்கள் குடும்பம் உள்பட இருவீட்டார் சம்மதத்துடன் தங்க நகை 600 சவரன், வெள்ளி 20 கிலோ, விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் வரதட்சனையாக கொடுக்கப்பட்டது. கடந்த 25.04.2018ல் திருமணம் இனிதே நடைபெற்றது. இரண்டு வருடம் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 ஜூலையில் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சுருதியிடம் மீண்டும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இதெல்லாம் பொறுத்துக் கொண்ட என் மகள் சுருதியை 2021ஆம் ஆண்டு மே மாதம் கே.பி கந்தன், மாமியார் கே.பி.கே.சந்திரா, கே.பி.கே.இந்துமதி, கே.பி.கே சதீஷ்குமார் ஆகியோர் எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தினார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அம்பத்தூரில் உள்ள என் வீட்டிற்கு வந்தடைந்தார்.

நான் கே.பி.கந்தனிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினேன். நாங்கள் கேட்ட வரதட்சணை கொடுத்தால் தான் உன் மகளை வீட்டிற்குள் சேர்ப்போம் என்று தெரிவித்தார். என் மகளை வரதட்சனை கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சதீஷ்குமார், அவரின் தந்தை K.P. கந்தன், தாயார் சந்திரா, அவருடைய மகள் இந்துமதி ஆகியோர்கள் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஸ்ருதியின் தந்தை ஸ்ரீகாந்த் ஆவடி காவல் ஆணையர் அலுலவகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பு எழுந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தனின் மகனும் சென்னை 182வது வார்டு கவுன்சிலருமான சதீஷ்குமார் சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்துவிட்டோம் என்றும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி பிரியதர்ஷினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் சதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். 1000 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தியாக கூறப்படும் குற்றச்சாட்டை சதீஷ்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+