29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பழைய பொறுப்புகளை கொண்டு விளம்பரப்படுத்தி கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக எஸ்பி வேலுமணி, அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படாது என்பதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏ-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவர்களின் மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு சுமூக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதனிடையே சிலர் எஸ்பி வேலுமணி அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் எஸ்பி வேலுமணி அணியினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். எஸ்பி வேலுமணி அணி தரப்பில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டது. தங்களின் பதவிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பது அந்த டிமாண்டில் ஒன்றாகும். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அதிமுக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்த 29 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
இந்த அறிக்கையின் மூலமாக மீண்டும் அவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படாது என்பதை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அதிமுகவில் புதியவர்கள் பவர் செண்டராக உருவாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எஸ்பி வேலுமணி அணியினர் மீது எடப்பாடி பழனிசாமி இன்னும் கோபத்திலேயே இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்!












Click it and Unblock the Notifications