அதிமுக எம்எல்ஏ, எக்ஸ் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்! தட்டி தூக்கிய செங்கோட்டையன்
சென்னை: அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியின் போது சட்டசபை சபாநாயகராக இருந்தவர் தனபால். இவரது மகன் லோகேஷ். இவரும் அதிமுகவில் இருந்து வருகிறார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
பி.காம், எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட லோகேஷ், 3 ஆவது இடத்தை பெற்றார். அதாவது அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு கிடைத்தது. முருகனுக்கும் லோகேஷுக்கும் இடையே கிட்டதட்ட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் ஆகும்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தனது தந்தை எம்எல்ஏவாக இருந்து வரும் அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினாராம். 2 மாதங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது சப்தமின்றி லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.
அவிநாசி அதிமுகவின் கோட்டையாகும். இங்கு 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்தே அதிமுக வென்று வருகிறது. இடையில் 1996 ஆம் ஆண்டு மட்டும் திமுக வென்றிருக்கிறது. மற்றபடி 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக வேட்பாளரே வென்றுள்ளார்.
இந்த நிலையில்தான் அப்பாவின் தொகுதியில் போட்டியிட லோகேஷ் விருப்பமனு வழங்கினார். ஆனால் இந்த 2 மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.
அதிமுக எம்எல்ஏவாக தந்தை இருந்து வரும் நிலையில் அவரது மகன் லோகேஷ் தவெகவில் இணைந்திருக்கிறார். ஏதோ அதிருப்தியில் இருந்தவரை செங்கோட்டையன்தான் சமாதானம் பேசி தவெகவிற்கு அழைத்து சென்றுள்ளார் என சொல்லப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு பிறகு ஜேசிடி பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், வி.எஸ்.பாபு, கு.ப.கிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் வரிசையில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் இணைந்துள்ளார்.
-
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா! -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
அப்படியே ஒரு நொடி.. ஆடிய கால்கள்.. மயங்கிய ராமதாஸ்.. விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்!












Click it and Unblock the Notifications