‘டபுள்’ பேரல் ‘சிங்கிள்’ ஆயிருச்சு! எல்லா குழப்பத்துக்கும் ‘அது’தான் காரணம்! போட்டுடைத்த புகழேந்தி!
சென்னை : அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கு மூல காரணம் யார் எதற்காக ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது என்பது குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரான புகழேந்தி விரிவான பல தகவல்களை கூறியுள்ளார்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ராயபுரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய தலைமை விவகாரம் திடீரென வெடித்து கிளம்பியது.
முதலில் தொண்டர்கள்தான் ஒற்றை தலைமை கோரிக்கையை முன்வைத்தனர் என்ற தகவல் பரவிய நிலையில் கட்சி அலுவலகத்திற்குள் நடந்த கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதிமுகவில் குழப்பம்
இதையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர் என்றும் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். இதனால் அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதே பரபரப்பும் எந்த நேரமும் நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் தற்போது நடக்கும் இந்த ஒற்றை தலைமை விவகாரம் எவ்வாறு வெடித்துக் கிளம்பியது. இதற்கு மூலகாரணமாக செயல்பட்டவர் யார் என்பது குறித்து அதிமுகவில் நீக்கப்பட்ட வரும் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான கர்நாடகா புகழேந்தி பல தகவல்களை அளித்துள்ளார்.

கர்நாடகா புகழேந்தி
இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழிடம் பேசிய அவர்,"கட்சியில் தற்போது நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ராஜ்யசபா சீட். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகும் தன்னை இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஒரு சீட் பன்னீர்செல்வம் தரப்புக்கு பெற்றுத்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் தென் மாவட்டங்களிலும் கட்சியிலும் உள்ள ஒ பன்னீர் செல்வத்தின் செல்வாக்குதான் காரணம் இதனால் தங்களுக்கு அதிமுகவில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த ஜெயக்குமார், பொன்னையன் என் போன்றோர் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனை தொடர்ந்து பாஜக அதிமுகவை அடுத்து என்ன எனும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பொது வெளியில் ஓபனாக பேசினார் ஜெயக்குமார்.

சர்ச்சை ஜெயக்குமார்
ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகே ஊடகங்களிலும் கட்சியிலும் இந்த விவகாரம் வெடித்து கிளம்பியது மேலும் தொடர்ந்து ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு கூட பன்னீர்செல்வத்தின் தயவு தேவைப்படுவதாக கருதிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் அவற்றை தலைமையாக தானே இருந்தால் தனித்து முடிவுகளை எடுக்க முடியும் என கருதுகிறார். மேலும் பன்னீர் செல்வத்தை விட தனக்கு அதிக அளவிலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆதரவு இருப்பதாக கருதும் அவர் கட்சியின் ஒற்றை தலைமையாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்து முடிவுகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே எடுக்கலாம் என நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமில்லை. அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்பட்ட போது அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் மதுசூதனன் அதன்பிறகு இணை மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமி இணைந்தார்.

ஓபிஎஸ் திட்டம்
கட்சியில் இருக்கும் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டிவிட்டு தான் அந்த பதவியை கைப்பற்றலாம் என அவர் நினைப்பது அவ்வளவு எளிதில் நடக்காது. காரணம் கட்சி சட்ட விதிகளின்படி தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரையும் நிர்வாகிகளை மாற்ற முடியும். இதையெல்லாம் நன்கு அறிந்தே ஓபிஎஸ் தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த முறை ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது தன்னுடன் இருந்தவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று அதிருப்தியின் காரணமாக பலர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி சென்றனர். தற்போது கே.பி.முனுசாமி ஜேசிடி பிரபகர் , வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் மட்டுமே அவர் பக்கம் இருக்கின்றனர்.

சசிகலா வருகை
மேலும் கட்சியில் யார் இறுதியாக தலைமையை கைப்பற்ற அவர்களும் அவர்கள் பக்கம் செல்லலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் அமைதியாக நிலைமையை கவனித்து வருகின்றனர். சசிகலாவை பொருத்தவரை களத்தில் இறங்கி நிர்வாகிகளை சந்திக்க ஆரம்பித்தால் நிச்சயம் அதிமுகவிலிருந்து பெரும்பாலானோர் அவர் பின்னால் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை அவர் செய்யவில்லை ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த விதத்திலும் பயன் தராது. தன்னைப்போல கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பால் ஏமாற்றப்பட்டவர்கள் என இணைத்தாலே போதும் சசிகலாவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் ஆதரவு தருவார்கள்.

ஆன்மீக பயணம் எதற்கு?
ஆனால் அதை அவர் செய்யாமல் ஆன்மீக பயணம் மேற்கொள்வது எந்த விதத்திலும் பயன் தராது மேலும் அதிமுகவில் சசிகலா என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி ஒருபோதும் அவ்வாறு நடக்காது தற்போது ஆன்மீகப்பயணம் எதற்கும் பயன் தராது தான் ஏற்கனவே கூறியதுபோல களத்தில் இறங்கி பணியாற்றினால் மட்டுமே சசிகலா அதிமுகவிற்கு வர முடியும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்போது இருப்பதாக தெரியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications