தங்க நிறத்தில் ஜொலித்த திரிஷா.. விஜய் மேடையில் திடீர்னு எண்ட்ரி.. வைரலாகும் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க அவரது நெருங்கிய தோழியான நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.. சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கடந்து விஜய்யின் வெற்றியில் பங்கெடுக்கும் திரிஷாவின் இந்த வருகை, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. நீல நிற சேலையில் தேவதை போல் விழாவுக்குப் புறப்பட்ட அவர், தனது நண்பரின் புதிய பயணத்தைக் காண ஆவலோடு காத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்கிறார்.

Trisha Krishnan Thalapathy Vijay TVK CM Oath Ceremony Blue Saree Jasmine Flowers Chennai

சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் குவிந்து வருகின்றனர்.. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம், நடிகை திரிஷாவின் வருகைதான்.

நடிகை திரிஷாவின் நட்பு

ஆரம்பம் முதலே விஜய்யின் மிக நெருங்கிய தோழியாக அறியப்படுபவர் திரிஷா.. இவர்களைப் பற்றி பலவிதமான விமர்சனங்களும், சர்ச்சைகளும் சோஷியல் மீடியாவிர்ல அடிக்கடி கிளம்புவது வழக்கமான ஒன்றுதான்.

விஜய்யின் குடும்ப ரீதியான சில பிளவுகளுக்கு திரிஷாதான் காரணம் என்று கூட ஒரு காலத்தில் கிசுகிசுக்கள் பரவின.. ஆனால், இந்த சர்ச்சைகள் எதற்கும் விஜய் அல்லது திரிஷா என இருவருமே எந்த விளக்கமும் தராமல் அமைதி காத்து வந்தனர்..


மனைவி சங்கீதா - விவகாரம்

ஒருமுறை விஜய்யின் மனைவி சங்கீதா, ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக புகார் சொன்னதாக கிளம்பிய தகவலுக்கு அடுத்த நாளே, ஒரு திருமண நிகழ்வில் திரிஷாவுடன் விஜய் ஜோடியாக பங்கேற்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.. அந்த அளவுக்கு இவர்களின் நட்பு மிகவும் உறுதியானது என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த தினத்தில், சென்னை நீலாங்கரையில் நடந்த நிகழ்வில் திரிஷா நேரில் சென்று விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


விஜய் - திரிஷா நட்பு

இதனைத் தொடர்ந்து, கடந்த மே 4-ம் தேதி திரிஷா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.. இதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவர், நேற்று மதியம் சுமார் 12:50 மணியளவில் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குச் சென்றுள்ளார்..

திரிஷாவின் வருகையை அறிந்த விஜய், வாசலுக்கே வந்து அவரை வரவேற்று ஆரத்தழுவி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.. அப்போது திரிஷா, விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்காக தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், திருப்பதியில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தையும் வழங்கியுள்ளார்.. இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் தனிமையில் ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர் ஒன்றாக மதிய உணவு உட்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

நீல நிற சேலை - முகத்தில் மலர்ச்சி

இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த நிலையில், இன்று முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காக திரிஷா மிகுந்த உற்சாகத்துடன் கிளம்பினார். த்ரிஷா இன்று மிக நேர்த்தியான கடல் பச்சை (Seafoam Green) மற்றும் நீல நிறம் கலந்த பட்டுச் சேலையில் ஜொலித்தார். இந்த சேலைக்கு பொருத்தமாக தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட (Golden Motif) பிளவுஸை அவர் அணிந்திருந்தார். பாரம்பரியம் மாறாத அவரது இந்தத் தோற்றம் விழாவில் தனித்துத் தெரிந்தது.

அவரது சிகை அலங்காரம் மற்றும் அணிகலன்கள் இந்த தோற்றத்திற்கு கூடுதல் மெருகூட்டின. த்ரிஷா தனது கூந்தலை மிக நேர்த்தியாக கீழ்நோக்கிய கொண்டையாக கட்டியிருந்தார். அந்தக் கொண்டையைச் சுற்றி அடர்த்தியாக வைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச் சரம், அவரது பாரம்பரிய தோற்றத்தை முழுமையாக்கியது. மேலும், அவர் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தது அவரது முகத்திற்கு ஒரு தனிப் பொலிவைத் தந்தது.

Trisha Krishnan Thalapathy Vijay TVK CM Oath Ceremony Blue Saree Jasmine Flowers Chennai

மகிழ்ச்சியான முகம்

விழாவிற்குப் புறப்படும் முன் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். "தமிழகத்திற்கு இது ஒரு மிகப்பெரிய நாள், இந்த வரலாற்று நிகழ்வைக் காண நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு சிரித்தபடி அரங்கிற்குப் புறப்பட்டார்.

வைரலாகும் வீடியோ

விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு த்ரிஷா வருகை தந்த விதம் மற்றும் அவரது தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த மிக முக்கியமான தருணத்தில், அவரது உற்ற தோழியாக திரிஷா கலந்துகொண்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.. சென்னை நேரு விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், திரிஷாவின் இந்த வருகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. விஜய்யின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் ஒரு பலமான ஆதரவாகத் திரிஷா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+