முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி விஜய்க்கு ஆதரவு.. சட்ட ரீதியாக தந்த விளக்கம்
சென்னை: என்னைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்கச் சொல்லியிருக்க வேண்டும். அவரிடம் பெரும்பான்மைக்குத் தேவையான அந்த 'மேஜிக் நம்பரை' விட 10 இடங்கள் குறைவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த கட்சியின் தலைவரைத்தான் கவர்னர் முதலில் அழைக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்ட விதிமுறை என்று முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய் இதுவரை மூன்று முறை போய், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டார். ஒவ்வொரு முறையும் எம்எல்ஏக்கள் ஆதரவு குறைவாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பி வருகிறார். 118 எம்எல்ஏக்களை தன் முன்னே நிரூபித்தால் மட்டுமே பதிவியேற்க அனுமதி அளிக்க முடியும் என்று கூறி வருகிறார். மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் என்றும், ஆளுநர் மாளிகை இல்லை என்றும் கூறுகிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால் ஆளுநரோ நிலையான ஆட்சி வேண்டும் என்றால், தவெக முழு மெஜாரிட்டியை என்னிடமே நிரூபிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். இதுதான் சிக்கலுக்கு காரணமாக உள்ளது. இதில் அரசியல் உள்ளதாகவும் புகார்கள் உள்ளது. எனினும் அதனை நிரூபிக்க முடியாது..எனினும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் தான், முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்கச் சொல்லியிருக்க வேண்டும். அவரிடம் பெரும்பான்மைக்குத் தேவையான அந்த 'மேஜிக் நம்பரை' விட 10 இடங்கள் குறைவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த கட்சியின் தலைவரைத்தான் கவர்னர் முதலில் அழைக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்ட விதிமுறை. அவருக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து, தனது ஆதரவைத் திரட்டி ஒரு நிலையான ஆட்சியை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.
சில நேரங்களில் வாய்ப்பு கொடுக்கப்படும்போது அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறுவதும் உண்டு; சில நேரங்களில் நிரூபித்துக் காட்டுவதும் உண்டு. சிறுபான்மை அரசுகளும் கூட சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணம், மக்களவையில் நீண்ட காலம் நீடித்த நரசிம்ம ராவ் அரசு.
#WATCH | Delhi: On Tamil Nadu politics, Senior Advocate and Former Attorney General of India, Mukul Rohatgi says, "... According to me, Vijay should have been asked by the Governor on day one to come and form the government. Even if he was ten short of the magic number, it did… pic.twitter.com/tQJJLq2RBf
— ANI (@ANI) May 9, 2026
இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால், 118 பேர் ஆதரவு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலம் கவர்னரே ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார். சட்டமன்றம் செய்ய வேண்டிய வேலையை அவர் கையில் எடுக்கிறார். இது முற்றிலும் தவறானது.
இவ்வளவு பெரிய தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்தலையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியையோ மக்கள் விரும்புவதில்லை. பொதுமக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பணம், உழைப்பு மற்றும் நேரம் இந்தத் தேர்தலுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, 108 அல்லது 110 இடங்கள் வைத்துள்ள ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை." இவ்வாறு முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications