வாய் திறந்த அஞ்சலை.. யாரந்த பிரபல விஐபி? அப்பவே தலை தலையா அடிச்சிக்கிட்ட கி.வீரமணி.. சிக்கலில் பாஜக?
சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகியிருக்கிறார் பெண் தாதா அஞ்சலை.. பாஜகவிலிருந்து அஞ்சலை நீக்கக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பற்றின சில தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்... ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கஞ்சா விற்பனை: இதில் தொடர்புடைய மேலும் பலர் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள்.. அதில் ஒருவர்தான் பாஜக நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலை.. வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் இந்த அஞ்சலை. ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்தவர்.. பிறகு அவரையே கல்யாணமும் செய்து கொண்டவர்.
கடந்த 2019-ல் அஞ்சலையை சந்திப்பதற்காக ரகசியமாக வந்தபோதுதான், ஆற்காடு சுரேஷ் சுரேஷ் ஒருமுறை போலீசில் வசமாக சிக்கினார்... அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்திருந்தார் ஆற்காடு சுரேஷ்.. அப்போது, போலீசார் நள்ளிரவிலேயே அஞ்சலை வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் ஆற்காடு சுரேஷை கைது செய்திருந்தனர். அப்போதே அஞ்சலையின் பெயர் மீடியாவில் பலமாக அடிபட்டது.
இதற்கு பிறகு, திடீரென பாஜகவில் இணைந்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியும் ஒதுக்கப்பட்டது.. இந்த நிகழ்வும் அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மூத்த தலைவர் வீரமணி: அந்த சமயத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. அதாவது, 2021, ஜனவரி மாதம் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார் மூத்த தலைவர் வீரமணி.
தமிழக பாஜகவில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து வருவதாக கூறி, அவர்களின் பட்டியலையும் அந்த வெளியிட்டிருந்தார்.. அதில் அஞ்சலை பற்றியும் வீரமணி குறிப்பிட்டிருந்தார்.
"பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பாஜகவில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும்.. வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார். புளியந்தோப்பு அஞ்சலை மீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடிகள்: மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே.. தார்மீகம் பேசும் பாஜகவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.
கொலைகாரர்களையும், ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்.. எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும்" என்று மூத்த தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
தலைமறைவு: இன்றைய தினம், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், அஞ்சலையும் கைதாகி உள்ளார்.. அதிமுக, திமுக கட்சிகளை சேர்ந்த ஆண், பெண் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வரும்நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அஞ்சலையையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.. பல வருடங்களாக பெண் தாதாவாக வலம் வந்ததுடன், தலைமறைவாகவும் இருந்து வந்த இவரது மூவ்களை அறிந்து உளவுத்துறை கொடுத்த இன்ஃபர்மேசன்படி அஞ்சலையை கைது செய்துள்ளனர்.
அஞ்சலை மீது ஏற்கனேவ ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் கொஞ்சம் அடங்கியிருந்திருக்கிறார் அஞ்சலை.. ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு இவரது ஆட்டம் அதிகரித்து விட்டதாம். இதையெல்லாம் அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாகவே போலீஸ் அறிந்து கொண்டுள்ளது.
கரு.நாகராஜன்: அதுமட்டுமல்ல, க்ரைம் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வேண்டித்தான் பாஜகவில் சேர்ந்ததாகவும், ஆரம்பத்தில் பாஜக எல்.முருகனின் ஆதரவாளராக இருந்ததாகவும், அதன்பிறகு, பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜனின் ஆதரவாளராக மாறியதையும், மகளிர் அணியிலிருந்த தனக்கு கரு.நாகராஜன் தான் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் பதவி வாங்கிக்கொடுத்ததாகவும் போலீசாரிடம் சொன்னாராம் அஞ்சலை.
அதேபோல, பாஜகவில் உள்ள ரவுடிகள் பலரை பற்றியும் விலாவரியாக விவரித்துள்ளாராம் அஞ்சலை.. தற்போது பாஜகவிலிருந்து அஞ்சலை நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அஞ்சலை தந்துள்ள வாக்குமூலமானது, பாஜகவினர் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கிசுகிசுகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications