நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண்.. போலீசார் சுற்றி வளைத்து தடுத்ததில் மயக்கம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டனார் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி. அவரை பெண் காவலர்கள் கும்பலாக சேர்ந்து தடுத்து நிறுத்திய நிலையில் வைஷாலி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக விவசாய அணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு பாஜகவை விட்டு வைஷாலி நீக்கப்பட்ட நிலையில், தனக்கு நியாயம் கேட்டு வைஷாலி இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பு கோஷம் எழுப்பினார்.

உதகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தபோது, கறுப்பு கொடி காட்டிய முன்னாள் நிர்வாகியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியதால் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி மயக்கமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கம் அடைந்த வைஷாலிக்கு தண்ணீர் கொடுத்து ஆற்றுப்படுத்தினர். பின்னர், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கறுப்புக் கொடி காட்டிய சம்பவம் பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உட்கட்சி குழப்பங்களால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications