வட சென்னை காங். மாஜி தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!
சென்னை: வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார்.
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இறங்காமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராயபுரம் மனோ. வடசென்னையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ.
மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன். பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் ராயபுரம் மனோ. காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக, அகில இந்திய உறுப்பினராக, மாவட்ட தலைவராக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் மனோ.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications