காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிடி செல்வம் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். ஆதவ் அர்ஜுனா காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய காத்திருப்பதாக கூறியிருந்த நிலையில் பிடி செல்வம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.

இதேபோன்று புதிதாக கட்சி ஆரம்பித்த பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ரஞ்சித் குமாரும் தவெகவில் இணைந்துள்ளார்.

Former Congress Leader PT Selvam Joins Vijay TVK More Leaders Likely to Follow

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவிற்கு ஒரு மாதம் கூட இல்லை. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பம்பரமாக சுழல தொடங்கியுள்ளன. இந்த முறை தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்கிறது.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க விஜய் பணிகளை செய்து வருகிறார். நாளை முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்டையும் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நாளை மறுநாள் முதல் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். சென்னை பெரம்பூரில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளர். இதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்து இருக்கிறது.

இந்த சூழலில் தவெக தலைமை அலுவலகமான பனையூரில் விஜய் இது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மாற்று கட்சியில் இருந்து விலகியவர்களும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த பிடி செல்வம் இன்று விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். இதேபோன்று புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமாரும் தவெகவில் இணைந்துள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியில் கடந்த 60 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த 90 வயது கமலம்மாள் என்பவரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். சென்னை எழும்பூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைய வாசலில் வந்து நிற்பதாக கூறியிருந்த நிலையில் பி.டி செல்வம் தவெகவில் இணைந்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா அப்படி பேசிய மறுநாளே காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வம் அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+