முன்னாள் டிஜிபிக்கே விபூதி அடித்த மோசடி கும்பல்.. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் ரவி போலீசில் பரபர புகார்!
சென்னை: தனது புகைபடத்தை வைத்து போலியான ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி ரவி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் முதல் காவல் ஆணையராகப் பணியாற்றியவருமான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இளைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு ஊட்டும் வகையில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் ரவி.

இந்நிலையில், முன்னாள் டிஜிபி ரவி, சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமது புகைப்படத்தை வைத்து போலியான ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக அவர் புகார் அளித்துள்ளார்.
போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து, தான் பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறும் பரிந்துரை செய்து ஓய்வுபெற்ற டிஜிபி ரவியின் நண்பர்களுக்கு ஒரு கும்பல் மெசேஜ் அனுப்பி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் ரவி.

நண்பர்கள் இந்த விஷயம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததால், அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மோசடி கும்பல் ஓய்வுபெற்ற டிஜிபி பெயரிலேயே மோசடியில் ஈடுபட்டு வரும் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications