சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் தேசியத் தலைவர் ரேஸில் வேட்டிகட்டிய தமிழர்! வாய்ப்பை வசப்படுத்தும் முனைப்பில் ப.சிதம்பரம்!

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் ப.சிதம்பரமும் முன்னிலை வகித்து வருகிறார்.

Recommended Video

    ப்ரியங்கா காந்தி Or ப.சிதம்பரம் | காங்கிரசின் அடுத்த தலைவர் யார் ?

    மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பதுடன், பிரதமர் மோடியை நோக்கி ப.சிதம்பரம் கேள்விக்கணைகளை வீசி வருவது அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.

    இதனிடையே மல்லிகார்ஜுனே கார்கே, அசோக் கெலாட், ஆகியோரும் காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவிக்கு முட்டி மோதி வருகின்றனர்.

    இலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகைஇலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகை

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப்பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பின் காரணமாகவும், ஏற்கனவே அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையின் காரணமாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் திடமாக மறுப்பதால், தற்போதைய சூழலில் புதிய தலைவர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

    ஏன் சிதம்பரம்?

    ஏன் சிதம்பரம்?

    காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் இருக்கும் நிலையில் அவர்கள் யாரும் ப.சிதம்பரத்தை போல் மத்திய அரசுக்கு எதிராக வலிமையாக குரல் கொடுப்பதில்லை. தொடர்ந்து பிரதமர் மோடியின் நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார் ப.சிதம்பரம். குறிப்பாக திகார் சிறைவாசத்துக்கு பின்னர் மத்திய அரசு மீது கடந்த 3 ஆண்டுகளாக பாய்ச்சல் காட்டி வருகிறார் ப.சிதம்பரம். மேலும், பொருளாதாரம் உள்ளிட்ட பலதுறைகள் பற்றிய விவரங்களை ஆழமாக அலசி ஆராயக்கூடியவர் சிதம்பரம்.

    வேட்டி கட்டிய தமிழர்

    வேட்டி கட்டிய தமிழர்

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறை மத்தியில் ஆட்சி அமைத்த போது வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆகப் போகிறார் என சிதம்பரத்தை மையமாக வைத்து தகவல்கள் உலா வந்தன. ஆனால் மீண்டும் மன்மோகன் சிங்கிடமே பிரதமர் பொறுப்பை ஒப்படைத்தார் சோனியா. அப்போது சிதம்பரத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் இப்போது காங்கிரஸ் கட்சியில் கிடைப்பதற்கான சமிஞ்கைகள் தென்படத் தொடங்கியுள்ளன.

    காரிய கமிட்டி

    காரிய கமிட்டி

    காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இதனிடையே ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என அவரது அபிமானிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனால் தங்கள் குடும்பத்தை சாராத ஒருவர் தான் காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருக்கிறார்.

    English summary
    P Chidambaram Chance as Congress National President: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் ப.சிதம்பரமும் முன்னிலை வகித்து வருகிறார்.மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பதுடன், பிரதமர் மோடியை நோக்கி ப.சிதம்பரம் கேள்விக்கணைகளை வீசி வருவது அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X