அப்பாவை பிரிந்து.. அம்மாவை இழந்து! கண்ணீருடன் பீலா வெங்கடேஷின் இரு மகள்கள்! கண்ணீர் பின்னணி!
சென்னை: தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு எரிசத்தி துறை செயலாளராக பதவி வகித்து வந்த பீலா வெங்கடேஷ் (பீலா ராஜேஷ்) சமீப மாதங்களாக உடல்நிலை குன்றிய நிலையில் அப்போலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பீலா ராஜேஷுக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (செப்டம்பர் 24) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இவர், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

பீலா வெங்கடேசன்
பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் பிறந்ததும், வளர்ந்ததும், கல்வி கற்றதும் அனைத்தும் சென்னையில்தான். கல்வியில் சிறந்த ஆர்வம் கொண்ட அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய குடிமைப்பணியில் சேரும் கனவை நோக்கி முயற்சி மேற்கொண்டு, 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடக்கத்தில் பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பணியாற்றிய அவர், மத்திய ஜவுளித்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
கொரோனா காலம்
பின்னர் தமிழக கேடரைப் பெற்று மாநிலத்துக்கு வந்து, செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பொறுப்பேற்ற பீலா வெங்கடேசன், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்திய முகமாக விளங்கினார். தினசரி ஊடகங்களுக்கான தகவல் வெளியீடு முதல், மாவட்டங்களுக்கான நேரடி பயணங்கள் வரை தன்னாலான சிறந்த பணியைச் செய்து பாராட்டைப் பெற்றார். பின்னர், 2023 ஆம் ஆண்டு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
பீலா வெங்கடேசன்
அதே சமயம், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பெயரை "பீலா ராஜேஷ்" என்பதிலிருந்து "பீலா வெங்கடேசன்" என மாற்றிக் கொண்டார். அவரது முன்னாள் கணவர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ், பாலியல் குற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த பீலா ராஜேஷுக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
பீலா ராஜேஷ் மகள்கள்
கணவரை பிரிந்து தாய் பீலா ஐஏஎஸ் தனித்து வசித்து வந்த நிலையில் அவர் உடனேயே மகள்களும் வசித்து வந்தனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பீலா ஐஏஎஸ் உயிரிழந்த நிலையில் இரு மகள்களும் அவருக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் தாயும் மரணித்த நிலையில் அவரது இரு மகள்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications