லீக்கான “சீக்ரெட்”.. நடிகர் ரஜினியிடம் “தூது” சென்ற குருமூர்த்தி! வெங்கையா நாயுடு கொடுத்த “வார்னிங்”
'அரசியல் அரோக்கியமானது கிடையாது. இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.' என வெங்கையா நாயுடு பேச்சு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்று அவரிடம் சொல்லுமாறு பத்திரிகையாளர் குருமூர்த்தியிடம் தான் தெரிவித்ததாகவும் அரசியலுக்கு வருவது ரஜினிகாந்துக்கு நல்லது கிடையாது என்று சொன்னதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அரசியல் ஆரோக்கியமானது இல்லை என்பதால் இளைஞர்கள் அதற்கு வருவதை தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் மருத்துவமனையின் 25 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த், பத்திரிகையாளர் குருமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் ரஜினிகாந்தும், வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ரஜினிகாந்த் பேச்சு
அதில் பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்குள் நுழைந்தது மற்றும் அதிலிருந்து விலகியது குறித்து பேசினார். "நான் அரசியலுக்கு வரலாம் என நினைத்த போது கொரோனா வந்துவிட்டது. சிறுநீரக பாதிப்பு இருப்பதால் யாரையும் சந்திக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறினார்கள்.

கொரோனா
அத்துடன் கொரோனா 2வது அலையும் வந்தது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டதால் பின்வாங்க முடியாது என்று நான் மருத்துவர்கள் கூறினேன். அவர்கள் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் சில விஷயங்களை தெரிவித்தனர். கொரோனா 2வது அலை துவங்கி விட்ட நிலையில் மக்களை சந்திக்கவோ, பிரசாரம் செய்யவோ கூடாது என்றார்கள்.

மருத்துவர் அறிவுரை
இத்தகைய சூழலில் நான் என்ன செய்ய முடியும்? இதை வெளியில் சொன்னால் அரசியலுக்கு வர பயந்துவிட்டேன் என்பார்கள் என மருத்துவர்களிடம் சொன்னபோது எந்த ஊடகம், ரசிகர்களாக இருந்தாலும் அவர்களிடம் நான் உங்கள் உடல் நலம் குறித்து நான் வந்து விளக்குகிறேன் என்றார். இதனை சொல்ல பயம் தேவையில்லை.

அரசியலுக்கு வரவில்லை
அதன் பிறகே நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன். ஒரு சொட்டு ரத்தத்தை கூட நாம் உருவாக்க முடியாது என தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. எண்ணம் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

களங்கமற்றவர் வெங்கையா நாயுடு
சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெங்கையா நாயுடுவி அரசியல் பயணத்தில் சிறு களங்கம் கூட இல்லை. பாஜகவில் இணைந்து பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும், இந்தியாவின் குடியரசுத் துணை தலைவராகவும் இருந்தார். அனைவரும் அவருக்கு கட்சிகளை கடந்து மரியாதை கொடுத்தார்கள். அவர் எனது நல்ல நண்பர். அடிக்கடி நாங்கள் உரையாடுவோம்." என்றார்.

வெங்கையா நாயுடு பேச்சு
அதன் பின்னர் பேசிய வெங்கையா நாயுடு, "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று எனக்கு தெரிந்த பிறகு எனது நண்பர் குருமூர்த்தியிடம் அரசியலுக்கு ரஜினி வர வேண்டாம் என்று சொல்ல சொன்னேன். ரஜினிக்கு அரசியல் நல்லது இல்லை என்று நான் என்னுடைய அனுபவத்தை வைத்து சொன்னேன். அரசியல் அரோக்கியமானது கிடையாது. இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications