முரளிதராவ் முன்னிலையில்... பாஜகவில் இணைந்தார்... அண்ணாமலை!!
டெல்லி: பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.
Recommended Video
அரசியலுக்கு அண்ணாமலை வரலாம் என்று அவ்வப்போது கூறப்பட்டு வந்த நிலையில், அரசியலுக்கு வராமலேயே அரசியல் பேசி வந்தார். குறிப்பாக பாஜக ஆதரவு கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். இதனால் பெரும் சலசலப்புகளிலும் சிக்கினார். இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய இருப்பதாகசெய்தி வெளியாகி இருந்தது.

இணைந்த பின்னர் சென்னை அல்லது கோயம்புத்தூர் எதாவது ஒன்றின் பாஜக பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் பிரபல ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி தனது பணியை 2019ல் ராஜினாமா செய்தார் அண்ணாமலை. பணியை ராஜினாமா செய்த பின்னர் அரசியலில் சேரலாம் என்று கூறிவந்தார். இதையடுத்து இவர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் இணையலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி துவங்கினால், அவரது முதல்வர் வேட்பாளராகவும் இவர் இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. இதை அண்ணாமலையே வரவேற்று இருந்தார். அப்படி வாய்ப்பு கிடைத்தால், பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறிவந்தார். ஆனால் தற்போது நேரடியாக ரஜினியிடம் போகாமல் மறைமுகமாக போக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். 39 வயதாகும் அண்ணாமலை பாஜகவில் இணைவது குறித்து முன்பு அளித்திருந்த பேட்டியில், ''பாஜக தேசியக் கட்சி. நானும் தேசியவாதி. தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய பாதையை பாஜகவால் காட்ட முடியும் என்று நம்புகிறேன். பாஜகவில் சேருவது என்று தாமதமாகத்தான் முடிவு எடுத்து இருக்கிறேன். சமூக மாற்றம் என்பதைவிட, அரசியல் மாற்றம் மிகவும் முக்கியமானது. ஆதலால்தான் தற்போது அரசியலில் இறங்க முடிவு செய்து இருக்கிறேன்.
தமிழகத்தில் பாஜக குறித்து தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல இங்கு பாஜகவை யாரும் புரிந்து கொள்ளவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கரூர் மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை அண்ணாமலை வழங்கி வந்தார். பாஜகவில் எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் இணைய இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி இணைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு பாஜகவில் இணைவதாகவும் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications