திமுகவில் இணைந்த Ex-IRS அதிகாரி பாலமுருகன்! அரசியலுக்கு வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!
சென்னை: மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி க.பாலமுருகன் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்தது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் பாலமுருகன்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற க.பாலமுருகன் திமுகவில் இணைந்தார். ஓய்வு பெற இன்னும் 6 ஆண்டு காலம் இருந்தும் விருப்ப ஓய்வு பெற்று இவர், அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்தது ஏன்?
பாலமுருகன் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன்? தமிழ்நாட்டின் இன்றையப் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் பரவலான பங்கீட்டுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய சமூக, அரசியல் பண்பாட்டுத் தளங்களே அடிப்படை.
திராவிட மாடல் கருத்தியல் என்பது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதியை மக்கள் அனைவரும் பெற்று, நாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காத்து, கண்ணியத்தோடும் சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் வாழ வழி வகுக்கும் உயர்ந்த கோட்பாடு.
திராவிட மாடல்
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்று 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மக்களோடு உறவாடி உருவாக்கிய திராவிட மாடல் இன்று ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான மாடலாக மாறத் தொடங்கி உள்ளது.
வலிமையான இந்தியாவுக்கான கொள்கை முன்னோடியாகத் தமிழ்நாடும், வளமான தமிழ்நாட்டுக்கான அடிப்படையாகத் திராவிட முன்னேற்றக் கழகமும் செழித்து விளங்க வேண்டும்.
வெறுப்பு அரசியல், மறுப்பு அரசியல், பிரிப்பு அரசியல், விரக்தி அரசியல் போன்றவற்றை ஒதுக்கி, சமுதாயப் பொருளாதார பண்பாட்டு மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட திராவிட மாடல் அரசியலில் சேர்ந்து மக்கள் பணியாற்ற, திராவிடம் அளித்த கல்வியால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் முன்வராவிட்டால், நான் பெற்ற அந்தக் கல்வியால் என்ன பயன்?
தமிழ்நாட்டு வளர்ச்சி தொடர்ந்திட, நாம் நினைவில் கொண்டு செயல்பட வேண்டிய நெறிமுறைகள்:
பேரறிஞர் அண்ணா அளித்த வரைமுறைகள் (1949):
1. அமைப்புமுறை என்ற வாள்!
2. அன்பு என்ற கேடயம்!
3. கண்ணியம் என்ற கவசம்!
4. கட்டுப்பாடு என்ற முரசம்!
5. கடமையாற்றுவோம் என்ற முழக்கம்.
முத்தமிழறிஞர் கலைஞர் கொடுத்த கொள்கைகள் (1970):
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
5. மத்தியிலே கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி.
கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் முன் வைத்த முழக்கங்கள்(2018):
1. கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்.
2. தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.
3. அதிகாரக்குவியலை அடித்து நொறுக்குவோம்.
4. மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்.
5. வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு!












Click it and Unblock the Notifications