இந்திரா தேவையில்லாமல் செய்துட்டார்.. தட்டி கேட்டது வாஜ்பாய் மட்டும்தான்..திடீர்னு வீடியோ போட்ட மாஜி

டாக்டர் ஹண்டே பரபரப்பு வீடியோ பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்திராகாந்தி அம்மையார் தேவையில்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்து இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் கொடுத்த நாள் இன்று" என்று டாக்டர் ஹண்டே கச்சத்தீவு விவகாரம் குறித்து நினைவுகூர்ந்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ஹண்டே, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஆவார்.. இவருக்கு இப்போது 94 வயதாகிறது.. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர்..

தீவிரமான எம்ஜிஆர் விசுவாசி.. அதேபோல தீவிரமான கருணாநிதியின் எதிர்பார்ப்பாளர்.. இவர் ஒருமுறை கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியும் அடைந்தவர். பல தேர்தல்களில் கருணாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.

 கருணாநிதி

கருணாநிதி

ஆனால், காவேரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை தருவதாக சொல்லி தானாக முன்வந்தவரும்கூட.. சமீபத்தில்கூட ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும் அக்கறையாக அட்வைஸ் செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

 கச்சத்தீவு

கச்சத்தீவு

இப்படி மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்றோருடன் நெருங்கி பழகிய, ஹண்டே இன்று திடீரென ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அதில் கச்சத்தீவு விவகாரம் குறித்து, அவரே பேசியுமுள்ளார்..

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

அதில், அதில், "28ம் தேதி ஜூன் மாதம் 1974ம் ஆண்டு அன்றைய தினம் நமது பாரத பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் தேவையில்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்து இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் கொடுத்த நாள் இன்று. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். இது நடந்து 47 ஆண்டுகள் ஆகிறது. இதன் விளைவாக நாம் இன்றைக்கு வரைக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

 வாஜ்பாய்

வாஜ்பாய்

இந்த விஷயத்தை மக்கள் மத்தியிலே, இந்த கொடுமையான ஒரு தவறு செய்தவர், காங்கிரஸ் கட்சியின் நாயகி இந்திராகாந்தி என்கிற விசயத்தை மக்கள் மத்தியிலே எடுத்துக்கூறுவது நமது கடமை. இதனை பாராளுமன்றத்தில் தட்டிக்கேட்டவர் ஒரே ஒரு தலைவர். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பாய். இதனையும் நாம் மனதிலே கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

வழக்கமாக, தேர்தல் பிரச்சார சமயங்களில் மற்றும் தேர்தல் அறிக்கைகளிலும் மட்டும் கச்சத்தீவு விவகாரம் தவறாமல் இடம்பெற்று வரும்நிலையில், இப்படி ஒரு விவகாரமே இன்றைய தினம் அனைத்து கட்சிகளும் மறந்துவிட்டன.. இது சம்பந்தமாக யாருமே பேசவுமில்லை.. அப்படி இருக்கும்போது, ஹண்டே இதை பற்றி குறிப்பிட்டும், குற்றஞ்சாட்டியும் பதிவிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இந்நிலையில், இந்த வீடியோவை முன்னாள் மீன்வளர்த்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.. மேலும், "கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு கச்சத்தீவை மீட்போம் என்பதா?,28/6/1974ல் இதே நாளில் காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் விளைவாக தமிழக மீனவர்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அன்று தமிழகத்தை ஆட்சி செய்த திமுகஅரசு அன்றே எதிர்த்திருந்தால் இன்று மீனவர்கள் உயிரிழக்க நேராது" என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+