ஊழல் வழக்கில் சிறை என தீர்ப்பு வந்ததும் நெஞ்சை பிடித்தபடி கீழே சாய்ந்த இந்திரகுமாரி.. தீவிர சிகிச்சை
சென்னை: ஊழல் வழக்கில் 5 வருடம் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்த அடுத்த சில நிமிடங்களில் சுவாசக் கோளாறு காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி உள்ளார் இந்திர குமாரி.
தீர்ப்பை கேட்டதும் என் நெஞ்சை பிடித்துக் கொண்டு அங்கேயே விழுந்துள்ளார். கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு அவர் சென்றுவிட்டார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

என்ன வழக்கு
அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோசடி
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர். காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். ஆனால் பள்ளியே இல்லை.

சிறப்பு நீதிமன்றம்
இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

5 வருட சிறை
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திரகுமாரிக்கும், அறங்காவலராக இருந்த அவரது கணவர் பாபுவிற்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

சிறை செல்ல வேண்டிய நிலை
3 ஆண்டுக்கு கீழேயுள்ள தண்டனை என்றால் தீர்ப்பை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் இவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு சிறைக்கு போக வேண்டியிருக்கும். இப்படி ஒரு சூழல் இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் இந்திரகுமாரி. இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலிக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மேல்முறையீடு செய்து அங்கே இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கும் வரை இந்திரகுமாரிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நேர்ந்தால் அவர் சிறை செல்லாமலே விசாரணையை எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. தற்போது இந்திரகுமாரி திமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications