"சசிகலா மீது நடவடிக்கை எடுங்க.." போலீஸ் கமிஷனரிடம் போன ஜெயக்குமார்! என்ன காரணம்? பரபர தகவல்
சென்னை: சசிகலா தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் சசிகலா. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சசிகலா பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தண்டனை காலம் முடிந்ததைத் தொடர்ந்து, சசிகலா தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அப்போது தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் எக்ஸ் பேக்டராக இருப்பார் எனப் பல அரசியல் வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர்.

ஒதுங்கிய சசிகலா
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத நிலையில், வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அதிமுக தலைமை அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே, சசிகலா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனுக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. சசிகலாவின் இந்த முடிவு தேர்தல் களத்தில் டிடிவி தினகரனுக்கு பாதகமாக அமைந்தது.

சட்டசபை தேர்தல்
திமுகவுக்கு எதிரான அணியில் குழப்பம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக சசிகலா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அதிமுகவால் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. அதிமுக கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து தேர்தல் முடிந்து சில மாதங்கள் அரசியல் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, அதன் பிறகு அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு தனது அரசியல் அத்தியாயத்தை மீண்டும் தொடங்கினார்.

இரட்டை இலை கொடி
அதேபோல அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை இரட்டை இலை கொடி பொருத்தப்பட்ட காரில் சென்று சந்தித்தார். மதுசூதனன் மறைவுக்கும் கூட இரட்டை இலை கொடி பொருத்தப்பட்ட காரிலேயே சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் என்றும் சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். இது அதிமுக வட்டாரத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதற்கிடையே விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதிமுக படுதோல்வி அடைந்தது.

மீண்டும் பரபரப்பு
இதனால் மிக விரைவில் மீண்டும் சசிகலா கட்டுப்பாட்டில் அதிமுக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அன்று மீண்டும் இரட்டை இலை பொருத்தப்பட்ட காரில் சென்று அஞ்சலி செலுத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

ஜெயக்குமார் புகார்
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரைப் பயன்படுத்தி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலா மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உரிமை இல்லை
இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்துள்ள புகாரில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் ஆகியோரிடம் தான் காட்சி உரிமை உள்ளது. இதை டெல்லி உச்சநீதிமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையமும் கூட தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடவடிக்கை தேவை
அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத அவர், பொதுமக்கள் முன்னிலையில் பொதுச்செயலாளர் எனக் கூறி வருகிறார். இது இந்தியத் தண்டனை சட்டம் 419 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த அதிகாரமும் இன்றி அவர் கட்சியின் கொடியை காரில் பயன்படுத்துகிறார். மேலும், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றியுள்ளார். சசிகலாவின் இந்த செயல்பாடுகள் முழுக்க முழுக்க சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சசிகலா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications