மீண்டும் 'செருப்பு' அட்டாக் கூடாது.. தாங்காது - முன்னாள் அமைச்சரின் 'சொந்த தொகுதி சோகம்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. என்னதான் சீட் கிடைத்தது திருப்தி என்றாலும், 5 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்திலிங்கம் தரப்பு இன்னமும் மறக்கவில்லை.

ஆம்! 2016ம் சட்டமன்ற தேர்தலை வைத்திலிங்கம் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள்.

அப்போது வேளாண்மை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், ஒரத்தநாடு அடுத்த தென்னமநாட்டில் பிராச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 செருப்பை வீசிய போலீஸ்காரர்

செருப்பை வீசிய போலீஸ்காரர்

அப்போது, தென்னமநாட்டைச் சேர்ந்த போலீஸ்காரர் கோபி என்பவர், 'அமைச்சராகி 5 வருடம் பதவில இருந்தீங்க.. பல முறை எம்.எல்.ஏவா இருந்தீங்க.. என்ன செஞ்சீங்க இந்த தொகுதிக்கு?' என்று சப்தம் போட, உடனே அங்கு சிறிய கைக்கலப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த போலீஸ்காரர் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி வீச, அது வைத்திலிங்கத்தின் மேல் விழுந்தது. இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த கட்சியினர், பொது மக்கள் என அனைவரும் பார்க்க நேரிட்டது.

 எதிர்பாரா தோல்வி

எதிர்பாரா தோல்வி

இந்த சம்பவம் வைத்தலிங்கத்தின் தேர்தல் முடிவையே மாற்றிவிட்டது எனலாம். இத்தனை பேர் பார்க்க நடந்த அந்த சம்பவத்தை ஊர் மக்கள் அவல் போல் மென்றுக் கொண்டிருக்க, அந்த தேர்தலில் வைத்திலிங்கம், வெறும் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார். பப்ளிக்காக நடந்த இந்த சம்பவம் தான் வைத்திலிங்கத்தின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

 பாதுகாப்பு அரண்

பாதுகாப்பு அரண்

அந்த சம்பவம் நடந்த பிறகு, தனது சொந்த ஊரான ஒரத்தநாடு போவதையே வைத்திலிங்கம் வெகுவாக குறைத்துவிட்டார். அப்படியே போனாலும், அவரைச் சுற்றி ஒரு பெரும் படையே செல்லும். எவரும் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு, தன்னை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

 மீண்டும் அதே பாணி

மீண்டும் அதே பாணி

அதுமட்டுமின்றி, 2019ல் நடந்த தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்துக்காக ஒரத்தநாடு சென்றிருந்தார். ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பிரச்சார வேனில் முதல்வர் பழனிசாமி, த.மா.கா. வேட்பாளர் நடராஜன், வைத்திலிங்கம் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது வேனின் பக்கவாட்டில் இருந்து முதல்வரை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு முதல்வர் மேல்படாமல் அவரின் பின்புறம் வேனின் மேற்பகுதியில் விழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முதல்வர் மிக விரைவாக பிரச்சாரத்தை முடித்து அங்கிருந்து வெளியேறினார்.

 சத்தம் போட்ட வைத்திலிங்கம்

சத்தம் போட்ட வைத்திலிங்கம்

அதுமட்டுமின்றி, கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை செங்கோட்டையன் உட்பட 4 அமைச்சர்கள் பார்வையிட வந்தனர். அப்போது வைந்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாட்டில், அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சொந்த ஊரிலேயே இப்படிச் செய்கிறார்களே என டென்ஷனான வைத்திலிங்கம், ஸ்பாட்டிலேயே அங்கு குழுமியிருந்தவர்களை திட்டினார்.

 இம்முறை கறார்

இம்முறை கறார்

இந்த நிலையில் தான், வைத்திலிங்கத்துக்கு மீண்டும் ஒரத்தநாட்டில் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நடந்த விரும்பத்தகாத செயல்கள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் வைத்திலிங்கம் தரப்பு உறுதியாக உள்ளதாம். மீண்டும் சொந்த தொகுதியில் 'அட்டாக்' என்றால், பாடி தாங்காது என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் இம்முறை கறார் காட்டப்படும் என்கிறது முன்னாள் அமைச்சர் தரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+