சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னிக்கு வேண்டாம்! திடீர் கோரிக்கை வைத்த அரசு வழக்கறிஞர்! ஒருநாள் தள்ளி போன எஸ்.பி.வேலுமணி வழக்கு!

Google Oneindia Tamil News

சென்னை : தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் தமிழக அரசின் முறையீட்டை ஏற்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை
தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதாங்க பெருமை.. முக ஸ்டாலினின் முக்கிய எதிரியே நான் தான்.. ரெய்டு பற்றி எஸ்பி வேலுமணி பரபர பேச்சு இதுதாங்க பெருமை.. முக ஸ்டாலினின் முக்கிய எதிரியே நான் தான்.. ரெய்டு பற்றி எஸ்பி வேலுமணி பரபர பேச்சு

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் மீண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

ரத்து செய்யக்கோரி மனு

ரத்து செய்யக்கோரி மனு

அப்போது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள ஒற்றை நீதிபதி அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

தமிழக அரசு கோரிக்கை

தமிழக அரசு கோரிக்கை

மேலும் மத்திய அரசு வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று தள்ளிவைத்து இருந்தனர். இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார்.

நாளை விசாரணை

நாளை விசாரணை

அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனையடுத்து அரசு தரப்பு மற்றும் வேலுமணி தரப்பினர் நாளை தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர். அதே நேரத்தில் எல்.இ.டி. பல்புகள் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
As the petition filed by former AIADMK minister Sp Velumani seeking to quash anti-corruption cases against him has not been listed for hearing, it has been reported that the Chief Justice of Tamil Nadu will accept the appeal of the Tamil Nadu government and will hear it tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X