"யூ டர்ன்".. வீழ்கிறதா மற்றொரு விக்கெட்? யாரு நம்ம வெல்லமண்டியா? நிஜமா? எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
சென்னை: அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இப்போதும் ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
அதிமுக மாஜிக்களில் அடிக்கடி சலசலப்புக்கு உள்ளாகி வருபவர் மூத்த தலைவர் வெல்லமண்டி நடராஜன்.. திருச்சி அதிமுகவின் மொத்த பலமே இந்த சீனியர் தலைவர்தான்..!
பூசல்கள்: எனினும் உட்கட்சி பூசல் திருச்சியில் அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்தத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தோல்வி என்பது எதிர்பார்த்ததுதான்.. ஆனால், திமுகவில் மூத்த தலைவர் நேரு வெற்றிபெறுவதற்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் வெல்லமண்டிதான், என்று அதிமுகவினரே அப்போது வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.

காரணம், பலம் பொருந்திய திமுகவின் நேருவை எதிர்க்க, சட்டமன்றத் தேர்தலில் முன் அனுபவம் இல்லாத பத்மநாபன் என்பவர் அப்போது நிறுத்தப்பட்டிருந்தார்..
"திருச்சியில் தன்னை தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேருவுடன் டீல் போட்டுக்கொண்ட வெல்லமண்டி நடராஜன், டம்மியான வேட்பாளர் பத்மநாபனை நிறுத்தியிருக்கிறார்" என்றெல்லாம்கூட அப்போது அதிமுக தரப்பில் சலசலக்கப்பட்டது. இதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தலிலும் திருச்சியில் அதிமுக மண்ணை கவ்வியது.
அதிமுக வேட்பாளர்கள்: எனினும் தேர்தலில் தோற்ற அதிமுக வேட்பாளர்கள் அனைவரும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருந்தார்கள்.. ஆனால், வெல்லமண்டி நடராஜன் மட்டும், எடப்பாடியை சென்று சந்திக்கவில்லை.. இது அப்போதே பெருத்த சந்தேகத்தை கட்சிக்குள் உண்டுபண்ணியிருந்தது.
இப்படி அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி கொண்டிருந்த நேரத்தில், ஒருவேளை வெல்லமண்டி நடராஜன் சசிகலா பக்கம் தாவ போகிறாரோ என்றும் சிலர் கிளப்பி விட்டார்கள். ஆனால், திடீரென ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவை தந்திருந்தார் வெல்லமண்டி நடராஜன்.
பேச்சுவார்த்தை: அப்போது செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியையும் தந்திருந்தார்.. அதில், "அதிமுக பிளவுபடுத்த அந்நிய சக்திகள் செயல்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் சொல்கிறார்.. ஆனால், நானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஏன் இபிஎஸ் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்..
அதற்கேற்றவாறு, "அதிமுக உரிமை மீட்பு குழு" ஒன்றை உருவாக்கிய ஓபிஎஸ், அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் வெல்லமண்டி நடராஜன் பெயரையும் சேர்த்து அறிவித்தார்.. அந்தவகையில், ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகியிருந்தார் வெல்லமண்டி நடராஜன்..
அதிருப்தி: இப்படிப்பட்ட சூழலில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போதிருந்தே ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகளில், அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போயிற்று.. குறிப்பாக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது + ராமநாதபுரத்தில் தோல்வி தழுவியது + இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட நிகழ்வு + என இப்படி எதுவுமே ஓபிஎஸ் அணியிலுள்ள பலருக்கும் பிடிக்கவில்லையாம்.
அதனால்தான், ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அங்கிருந்து விலகி வந்து விட்டார்... இப்போது, வெல்லமண்டி நடராஜனும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..
புகைச்சல்: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று விரைவில் தாய் கழகமான அதிமுகவில் வெல்லமண்டி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்..
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே கட்சிக்குள்ளேயா யாராவது கிளப்பிவிட்ட வதந்தியா என்றும் தெரியவில்லை.. ஆனால், இது தொடர்பான யூகங்களும், சலசலப்புகளும் திருச்சி அதிமுகவில் பலமாகவே ஒலிப்பதை கேட்க முடிகிறது.. ஏற்கனவே சசிகலா, ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது தொடர்பான விவகாரங்கள் அதிமுகவுக்குள் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. இப்போது, இந்த விவகாரமும் சேர்ந்தே பரபரத்து வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications