Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை EX அமைச்சர் செல்லையா ராஜதுரை சென்னையில் காலமானார்! எம்ஜிஆர், சிவாஜிக்கு நெருக்கமாக இருந்தவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை சென்னையில் இன்று காலமானார். சென்னையில் வசித்து வந்த செல்லையா ராஜதுரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 98. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர் செல்லையா ராஜதுரை.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை சென்னையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 98. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்லையா ராஜதுரை சிகிச்சை பலனின்றி காலமானார்.

former-sri-lankan-minister-selliah-rajadurai-passes-away-in-chennai

இலங்கை முன்னாள் அமைச்சர்

இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 - 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் எம்பியாக இருந்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய செல்லையா ராஜதுரை, தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்.

இலங்கையின் தலைசிறந்த பேச்சாளராக இருந்து வந்த செல்லையா ராஜதுரை 'சொல்லின் செல்வர்' என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் மட்டக்களப்பு தொகுதியில் எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

33 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்

அதன் பிறகு தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளுக்கு அதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்தார் செல்லையா ராஜதுரை. பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல்நிலை படிப்பை முடித்தார். ஊடகவியலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

ஆளும் கட்சியில் இணைக்க

இதேபோன்று 'சுதந்திரன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் ராஜதுரை பணியாற்றி உள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் மட்டக்களப்பு தொகுதியில் வெற்றி பெற்றார்.

1979 பிப்ரவரி 10ஆம் தேதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து செல்லையா ராஜதுரையை ஆளும் கட்சியில் சேர்ப்பதற்காக கடந்த 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அரசியலமைப்பிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

சென்னையில் உயிரிழந்தார்

பின்னர் செல்லையா ராஜதுரைக்கு இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் செல்லையா ராஜதுரை சென்னைக்கு புலம்பெயர்ந்தார். புலம்பெயர் நபராகவே சென்னையில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னையிலேயே இறுதிச்சடங்கு

அங்கு அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். செல்லையா ராஜதுரை மறைவு செய்தி கேட்டு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்பட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அவரது இறுதிச் சடங்கு சென்னையிலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+