எனக்கு 1 லட்சம் ஓட்டு இருந்தா அத்தனையையும் சங்கரய்யாவுக்கே போடுவேன்.. எம்ஜிஆர் சிலாகித்த தலைவர்!
சென்னை: எனக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், அத்தனை வாக்குகளையும் சங்கரய்யாவுக்கே செலுத்துவேன் என முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வியந்து பேசிய தலைவர் சங்கரய்யா இன்று காலமானார்.
சுதந்திரப் போராட்டத் தியாகியும், தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை சிறைகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்த முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவருமான சங்கரய்யா இன்று தனது 102வது வயதில் காலமானார். தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் அனைவரின் பெரும் மதிப்பை பெற்றவர் சங்கரய்யா.

தனது 9 வயதில் போராட்டக் களத்தில் இறங்கிய சங்கரய்யா, வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக ஒலிக்கும் குரலாக இருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து சுந்திர போராட்டத்திற்காக கூட்டத்தை நடத்திய இவர், 1938ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் 1939ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம், பின் 1941ல் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திச் சிறை சென்றார்.
இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக 1957 தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் சங்கரய்யா. 1962-லும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1967-ல் மதுரை மேற்கு தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெற்றார். அதுதான் திமுக தமிழ்நாட்டில் முதன் முதலில் வெற்றி பெற்ற தேர்தல். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றார்.
1967 காலகட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனை தீவிரப் போராட்டமாக மாறியிருந்தது. அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியை அணுகி பிரச்சனைகளைச் சுலபமாகத் தீர்த்துவைத்தவர் சங்கரய்யா. அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரான பிறகு சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தார் சங்கரய்யா.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெரிதும் மதிக்கும் தலைவராக சங்கரய்யா திகழ்ந்தார். மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற கிராமத்திலிருந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், இனி அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகளைத் திறப்பது பற்றி ஆளுநர் உரையில் சேர்க்க வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தார் சங்கரய்யா. எம்.ஜி.ஆரும் இதை ஏற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு மக்கள் நலனுக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் சங்கரய்யா. அதன் காரணமாகவே "என் ஒருவனுக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், அவை அனைத்தையும் சங்கரய்யாவுக்கே செலுத்துவேன். என்னைப் பல நேரங்களில் வழிநடத்தியவர் அவர்" என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சிலாகிப்பாராம் எம்.ஜி.ஆர்.
சிறை வாழ்க்கையின்போது முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் உடன் நட்பு கொண்டவராக இருந்தார் சங்கரய்யா. அதேபோல் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வர் ராஜாஜி, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைத்து தலைவர்களிடம் நெருக்கம் கொண்டவர். சங்கரய்யாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், அவரது வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications