சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கருணாநிதியிசம்".. தேர்தலில் தோல்வியையே தழுவாத.. மாஜி மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவருமான கடம்பூர் ஆர். ஜனார்த்தனம் காலமானார்.. அவருக்கு வயது 90.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கடம்பூர் ஜனார்த்தனம்... சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தபோது, அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்.

"எங்ககிட்ட கேட்டீங்களா.." அதிமுகவுக்கு வானதி சீனிவாசன் 'பளிச்' கேள்வி.. கூட்டணியில் என்ன நடக்கிறது?

 பிரதமர்

பிரதமர்

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என 3 மாபெரும் தலைவர்களின் காலத்தில் கோலோச்சியவர்... திருநெல்வேலி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்பி தேர்தலில் இதுவரை தோல்வியையே சந்திக்காத பெருமைக்குரியவர். மறைந்த வாஜ்பாயின் அரசில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர்.. பிரதமர் மோடி மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தவர்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கோ பேக் மோடி சென்னையில் நடந்தபோதெல்லாம் அதற்கு எதிராக குரலை உயர்த்தியவர் ஜனார்த்தனன்.. "பாரத பிரதமருக்கு எதிராக கருப்பு கொடிகாட்டுவதுடன், "கோ பேக் மோடி" என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்களே இந்த தமிழ்நாட்டில்.. கட்சியைவிட நாடுதான் முக்கியம் என்று அண்ணா சொன்னாரே.. அந்த வகையில் நமக்கு பாகிஸ்தான்தான் முதல் எதிரி. அதனால், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடியை ஆதரிக்க வேண்டும்" என்று தன் கருத்தை வலிய சொன்னவர் ஜனார்த்தனம்.

 அண்ணாயிசம்

அண்ணாயிசம்

அதேபோல அண்ணாயிசம் என்ற கொள்கை மீது தீரா பற்று கொண்டவர்.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், "எம்ஜிஆர் சொன்ன அண்ணாயிசம் நிச்சயமாக வெற்றிபெறும்... அண்ணாயிசத்தை மறந்தவர்கள் நிச்சயமாக அரசியலில் தோற்றுப்போவார்கள்.. இது அண்ணாயிசத்துக்கும், கருணாநிதிக்கும் இடையே உள்ள போட்டி" என்று சொல்வார்.. ஆனால், இறுதிவரை டிடிவி தினகரனின் அமமுகவை இவர் ஏற்கவே இல்லை.

 மறைவு

மறைவு

அதிமுக நிகழ்ச்சிகளில் 90 வயது எட்டிவிட்டபோதிலும், ஜனார்த்தனன் அடிக்கடி பங்கேற்று கொண்டிருந்தார்.. பலரிடம் தன் கருத்துக்களை பகிர்ந்தும் கொண்டார்... ஆனால், முதுமை காரணமாக தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் ஜனார்த்தனம் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இரங்கல் அறிக்கை

இரங்கல் அறிக்கை

அதேபோல, அதிமுக தலைமையும் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர். அதில், "பெரியார், அண்ணா, எம்ஜிஆர், அம்மா ஆகியோரின் பேரன்பை பெற்றிருந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு கடம்பூர் ஜனார்த்தனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச்செயலாளர், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழக பணிகளை ஆற்றி உள்ளார். அதேபோல திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளதோடு, மத்திய அமைசச்ராகவும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை அற்றிய பெருந்தனை" என்று புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.

English summary
Former Union Minister and AIADMK senior leader kadampur Janarthanam passes away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X