"எல்லா குடும்பங்களும் குழந்தைகளுடன்.. ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம்!" எதை சொல்கிறார் ப.சிதம்பரம்
சென்னை: அண்ணா நூலகத்தில் தனது அனுபவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் சி.என். அண்ணாவின் 102ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 2010 செப்டெம்பர் 15ஆம் தேதி இந்த நூலகம் திறக்கப்பட்டது.

அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி இந்த நூலகத்தைத் திறந்து வைத்தார். ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான இது மொத்தம் 8 தளங்களைக் கொண்டது. இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல லட்சம் புத்தகங்கள் உள்ளன.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் தனது அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம்
இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தன. எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications